January 8, 2018 maamallan

அமேஸான், இன்னும் ஹீரோ ஆகவில்லை. இப்போதுதான் தமிழ்ப் புத்தக சீனுக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. அதற்குள்ளாகவே பதிப்பாளர்கள் எல்லோரும் அச்சுப்புத்தகம் போடுவதற்கு அக்கிரிமெண்ட் போடும்போதே eBook உரிமையையும் சேர்த்தே எழுதி வாங்கிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அநேகமாக நான் ஒருவன்தான் தரமட்டேன் என முரண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இன்றைக்கு அமேஸானில் வரும் காசு வெறும் சில்லறைதான். அதிலும் பங்குவேண்டும் என பதிப்பாளர்கள் கேட்பது அதைவிட மோசமில்லையா. அமேஸான் eBookகில் என்ன இருக்கிறது எவ்வளவு இருக்கிறது அல்லது என்ன இல்லை என்பதைப் பற்றி எழுத்தாளர்களுக்கோ பதிப்பாளர்களுக்கோ எவ்வளவு தெரியும் என்பதைப் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றியெல்லாம் எந்தத் தரப்பாரும் கவலைப் படுவதாகவும் தெரியவில்லை. எல்லோரும் படியளக்கிற பகவான் என்பதைப் போல நீடிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  அதுல ஒரு எளவும் இல்லையா.  அதான் தெரியிதில்லே அதுல ஒன்னுமில்லேனு. அப்பறம் எதுக்கு அதுலையும் உனக்குப் பங்கு எனக்கேட்கத்தான் யாருக்கும் தைரியமில்லை. எதுவும்…

January 7, 2018 maamallan

டிசம்பர் 21ஆம் தேதி, காலச்சுவடு கண்ணன் கைப்பேசியில் அழைத்திருந்தார். எப்படி இவ்வளவு துல்லியமாகத் தேதி நினைவிருக்கிறது என்பது, இதை முழுவதும் படிப்போருக்குத் தன்னால் தெரியவரும். அலைபேசியில் அழைத்த கண்ணன், மாமல்லன் புக்ஃபேர்ல காலச்சுவடு ஸ்டால்ல ஒரு நாள் சாயங்காலம் வந்து புத்தகத்துல வாசகர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் குடுக்கணும் என்றார்.  நானா. ஹாஹ்ஹாஹ்ஹா எங்கிட்டையெல்லாம் யார் வந்து ஆட்டோகிராப் கேக்கப்போறாங்க. அப்பறம் பேஸ்புக்குல இவ்வளவு ரகள பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்கக்கிட்ட கையெழுத்து வங்கணும்னு நாலு ரீடர் கூடவா இருக்கமாட்டாங்க.  அப்படியில்லே நான் என்ன மத்த ரைட்டர்ஸ் மாதிரியா யார் வந்து எங்கிட்ட கையெழுத்து கேக்கப்போறாங்க.  (நானென்ன காலச்சுவடு ரைட்டர் பெருமாள்முருகன் மாதிரியா, அதிரிபுதிரியா ரகளை நடந்து ஹைகோர்ட்டே எழுதச் சொல்லி கெஞ்சிக் கேட்டப்பறம் எழுத ஆரம்பிக்க. ஒரு ஆப் பாயில் ஆண்ட்டி குடுத்த புகார்ல வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்லேந்து ஒரு இன்ஸ்பெக்டர் கூப்ட்டாரு. அர்ஸ்ட்டுகிரெஸ்ட்டு ஜெயிலுகியிலுனு எனக்கும் சடங்கு சீமந்தம்னு எதாச்சும் நடந்திருந்தா…

December 28, 2017 maamallan

விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி எந்த எல்லைக்கும் போய்விடுகிறீர்கள், அதுவே உங்களுக்கான பலம் மற்றும் பலவீனம் என்று ரமேஷ் பிரேதன் பற்றிய பதிவிற்கு பேஸ்புக்கில் மறுமொழியிட்டிருந்தார் சித்ரா சம்பத் என்கிற பெண்மணி.  உண்மையில் சொல்லப்போனால், எனக்கு ரமேஷ் பிரேதன் மீதிருப்பது வருத்தம்தான். ஆனால் ஜெயமோகன் மீதிருப்பது கோபம்.  ஊர்கூடிக் கொடுத்த பணத்தைத் தொலைக்கப் பார்க்கிறாரே என்கிற பதற்றத்தினால் ரமேஷ் பிரேதன் மீது வருவது வருத்தம்தான் கோபமில்லை.  ஆனால் பப்ளிசிடிக்காகதான், தாம் ரமேஷ் பிரேதனுக்கு உதவுவதாக எங்கே ஊர் தூற்றிவிடுமோ என்று அச்சப்பட்டு தம் நண்பர்களை ஒருங்கிணைத்துத் தாம் செய்த உதவியை, வெளியுலகின் பார்வையிலிருந்து மறைத்ததன் காரணமாக, அந்த உதவி உருப்படாமல் போனதற்காக அவர் மீது வருத்தமில்லை, கோபம் வருகிறது.  ஜெயமோகனும் நண்பர்களும் எவ்வளவு தொகையை உதவியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.  ஒன்றல்ல இரண்டல்ல நாலரை லட்சம்.  இதைக் கேள்விப்பட்டபின்புதான், புதிரொன்று விடுபட்டது.  நம்மைப் போன்ற நாதியத்த பயல் சொல்லியே கிட்டத்தட்ட 1.5 லட்சம்…

December 28, 2017 maamallan

உடல்நலமும் மனநலமும் ரமேஷ் பிரேதனின் எதிர்கால நலனுக்காகவும் அவரது உடல் நலம்பெறவும் பொருளதவி செய்த அனைவருக்கும் அடுத்த பெருங்கடமை காத்திருக்கிறது. அது, ஊர்கூடி ரமேஷ் பிரேதனிடம் அளித்திருக்கும் 2.77 லட்சத்தை ரமேஷ் பிரேதனிடமிருந்து காப்பாற்றுவதாகும். செலவானது போக இன்னமும் அவரிடம் 2.50 லட்சம் இருக்கிறது. அதில் குறைந்தது 2 லட்சத்தையேனும் வங்கி ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போட்டுவைப்பத்தே புத்திசாலிதனமாகும் என்று எடுத்துச்சொல்லி வங்கி மேலாளரிடம் பேசி ஒருவாரமாகியும் படிவம் வங்கிக்குப் போகிற வழியாய் தெரியவில்லை. ஆனால் ரமேஷ் பிரேதனோ, எஸ்.ராவின் வாசக நண்பரான ஜார்க்கண்ட் டாக்டர் சொன்னபடி ஸ்கேன் செய்துவந்ததைப் பற்றி என்னிடமும் 2 லட்ச ரூபாயை எவரோ வட்டிக்கு விடுபவரிடத்தில் கொடுத்து மாதச் செலவை சமாளித்துக்கொள்வதைப் பற்றி நம்முடைய டாக்டரிடத்திலும் விவாதிக்கும் அளவுக்குத் தெளிவான புத்திசாலியாக இருக்கிறார். அவரைக் குறைசொல்லவில்லை. பணம் கொஞ்சம் கூட வந்தால் பல நிர்பந்தங்களும் கூடவே வரும். இதுதானே வாழையடி வாழையாய் மனிதனின் தலைவிதி. இப்படி ஒரு போஸ்ட்…

December 22, 2017 maamallan

ரமேஷ் பிரேதன் இரண்டு நாட்களாக டெஸ்க்டாப் மற்றும் ஜியோ நெட் உதவியில் இணையத்தில் இருக்கிறார். நிறைய படிக்கத் தொடங்கியிருக்கிறார்.  பிஸியோதெரப்பி நிபுணர் வந்து பார்த்துவிட்டு, முதலில் வாக்கர் உதவியுடன் நடந்து, வீட்டிலிருக்கும் நிலை சைக்கிளில் பயிற்சி செய்து ஒரு மாதகாலம் உடலை இலகுவாக்கிக்கொள்ளும்படி அறிவுருத்தியிக்கிறார். பிறகு தம் வேலையைத் தொடங்கினால்தான் பலன் கிடைக்கும் என்று  கூறியிருக்கிறார்.  அதற்கு, முதலில் பிறர் உதவியின்றி சைக்கிளில் ஏறி உட்காரவும் இறங்கவும் முடிகிற அளவுக்கு அவரது உடல் எடையைக் குறைத்தாகவேண்டும்.  இதற்கு எனக்குத் தெரிந்த ஆரோக்கியமான ஒரே வழி பேலியோதான். பாதாம் வெண்ணெய் முட்டை பச்சைக் காய்கறிகள் பாதாம் பிசின் பால் என்று கிட்டத்தட்ட கீட்டோஸ் உணவுவைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இது பிடிக்கவும் செய்கிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.  அடிப்படையில் வாழ்வோ மனிதர்களோ எவ்வகைச் சிக்கலைக் கொடுத்தாலும் அலறிப் புலம்பாமல், சமரசம் செய்துகொள்ளாமல் வைராக்கியத்துடன் எதிர்கொள்பவனே போராளி.   எனவே தம் கனவான ஏழு நாவல்களில் இரண்டாவதையோ…

December 11, 2017 maamallan

ரமேஷ் பிரேதனின் SBI A/cல் நேற்று காலையில் இருந்த இருப்பு வெறும் 12 ரூபாய். என்ன செய்வது என்று விழி பிதுங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்.  நான்கு நாட்களுக்குமுன் ஒரு பதிப்பாளருக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் பணம் கேட்டு அவர் அனுப்பியிருந்த இரண்டு SMSகளுக்குப் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து மட்டும் நேற்றுப் பகல் வாக்கில் வந்திருந்த பணம் 3000 ரூபாய். அதை எடுத்து உதவி செய்பவர்களுக்கு சம்பளமாகக் கொடுத்துவிட்டார். நேற்று இரவிலிருந்து நீங்கள் அனுப்பத்தொடங்கி இதுவரை சேர்ந்திருப்பது 22,500/- இது சில மாதங்களுக்கு அவரது உணவு மற்றும் உதவியாளர் செலவை ஈடுகட்டிவிடும்.  பிஸியோதெரப்பி பயிற்சியின்றி அவரது ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவே இயலாது என்பதே எதார்த்தம். பிஸியோதெரப்பி, குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் அளிக்கப்படவில்லையென்றால், உடல் ஆரோக்கியத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணவியலாது. இதற்கு ஆகக் குறைந்தபட்சமாகப் பார்த்தாலும் மாதம் 15 ஆயிரம் தேவைப்படும்.  இதற்கு, 5000/- வீதம் உதவ மாதம் மூன்றுபேர் வீதம் மொத்தம் 18 பேர் தேவை. சேருகிற…

December 3, 2017 maamallan

1980முதல் 1994வரை எழுதி வெளியான 30 கதைகளை 4 புத்தகங்களாகவும் 2010ல் உயிர்மை வெளியிட்ட முழுத் தொகுப்பையும் நானே வெளியிட்ட சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையும் அமேஸானில் 6 eBookகுகளாக 24.10.17 முதல் வெளியிடத்தொடங்கினேன். அவற்றில் இதுவரை 54 பிரதிகள்  விற்றிருக்கின்றன. 5702 பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன.  இன்று வெளியான சின்மயி விவகாரம் மட்டுமே 424 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.  எனக்கு eBook பற்றிச் சொன்ன பா ராகவனுக்கும், eBookகில் பொருளடக்கத்தை எப்படி உருவாக்குவது என்பதைச் சொல்லிக்கொடுத்த ஹரன் பிரசன்னாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.  இந்த கிண்டில் அமேஸான் கொண்டாட்டம் தொடங்கியபின் இவர்கள் இருவரையும் நான் இன்னும் நேரில்கூட சந்திக்கவில்லை. எல்லாம் கைப்பேசி மூலமான வாய்ப்பேச்சுதான்.   விடுப்பில் இருந்துகொண்டு விடுதலையான எண்ணத்துடனும் ஓய்வின் காரணமான உடல் ஆரோக்கியத்துடனும் முழுக்க இலக்கியக் காரியங்கள் மட்டுமே செய்துகொண்டு உவப்புடன் இருந்துகொண்டிருக்கும் இந்த சில நாட்களே என் வாழ்வின் சிறந்த நாட்கள். எனவே VRS கொடுத்துவிடலாமா என்கிற உந்துதல்…

December 3, 2017 maamallan

நான் இவனுக்கு புக்கு போடாட்டா இந்த எழுத்தாளப் பயலையெல்லாம் யாருக்குத் தெரியும். நான்தான் இவனுக்கெல்லாம் அட்ரஸே குடுத்தேன். என் முதல் புக்கை நானே வெளியிட்ட 1983ல மெட்ராஸ் எங்க இருக்குனாவுது உங்களுக்குத் தெரியுமா மொதலாளி. இல்லே நீங்க கலை இலக்கிய சேவை செய்யிறதுக்காக பொட்டி நிறைய பணத்தோடதான் சென்னைக்கு வந்தீங்களா மொய்லாளி.  இவனுக்கெல்லாம் புக்கு விக்குமா. நான்தான் பாவப்பட்டுப் போனாப் போவுதுனு இவனுக்கு புக்கு போட்டேன் மொய்லாளி அமேஸான்காரன் எவ்ளோ புளுகுணிப் பயலா இருக்கான். இப்படி அப்பப்ப ராயல்டி கணக்கைக் குடுத்து, எழுத்தாளப்பயலுவளுக்கு எப்படில்லாம் மயக்கத்தையும் மாய பிம்பத்தையும் உருவாக்கறான் பாருங்க. இத்தினிக்கு என் புக்கு எல்லா இடத்துலையும் இன்னும் அப்படியே ஃபிரீயாதான் கிடைக்கிது பாத்துக்கிடுங்க. பெரிய மொய்லாளிக்கு எதிரா இப்படிலாம் பேசறேனேன்னு சமூகம் தப்பா எடுத்துக்கப்பிடாது.  இன்னோரு விஷயம் விட்டுப்போச்சு மொய்லாளி. இது வெறும் புக்கை டவுன்லொட் பண்ணினதுக்கான ராயல்டி துட்டு மட்டும்தான். பேஜ் ரீடுக்குத் தனியா தரேங்கறான் படுக்காளிப்பய. …

November 20, 2017 maamallan

நன்றி: தி இந்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் என்பது இருக்கும்தானே என்று சகஜமாக எடுத்துக்கொள்வதைப் போல வியாபாரம் என்று இருந்தால் வரி எய்ப்பு இருக்கதானே செய்யும் என்பதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம்.  அரசாங்கத்தின் ஊழல் மக்களின் வரிப்பணத்தில்தான் நடக்கிறது என்றாலும் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை. அதாவது அவனது பாக்கெட்டில் இருந்துதான் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டாலும் அவனது சட்டையோ பர்ஸோ நேரடியாகக் கிழிபடாததால் அவன் அது குறித்து மெத்தனமாக இருக்கிறான். ஆனால் வியாபாரம் அப்படியல்ல. அதிலும் குறிப்பாக ஒட்டல் தொழில் அப்படியல்ல. சாதாரண மனிதனை அன்றாடம் நேரடியாக பாதிக்கிறது. அப்படிப்பட்ட விஷயத்தில் கொள்ளை அடிக்க அசாதாரண தைரியம் வேண்டும். அது ஒட்டல் பெருமுதலாளிகளுக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.  இல்லையென்றால் GST ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என்றவுடனேயே, அது அமலுக்கு வரும் முன்பாகவே விலையை ஏற்றி இருப்பார்களா. சரி விலையைத்தான் ஏற்றினார்களே, ஜூலை 1 முதல் ஏற்றிய விலைக்கு உள்ளாகவாவது…

November 8, 2017 maamallan

கவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது.  நம்பியின் மகனது அறையில் தங்கியிருக்கும் அவர் நண்பருக்கு போன் அடித்தேன் போகவில்லை. அவரது இடம் டிஸ்கவரி புக் பேலஸ் அருகில் இருக்கவே, சும்மா உள்ளே எட்டிப் பார்த்தேன். வேடியப்பனின் தம்பி என்னைப் பார்த்ததும் அண்ணனுக்கு போன் பொட்டுவிட்டார்.  எதுக்குங்க. நான் சும்மாதான் வந்தேன் என்றேன்.  முக்கியமானவங்க யார் வந்தாலும் அண்ணன் சொல்லச்சொல்லி சொல்லீருக்காங்க.  போனில் வந்த அவரோ எதிர்ப்புறம் தாம் புத்தக வேலையாய் இன்னொரு அலுவலகத்தில் இருப்பதாகத் தெரிவித்து வாருங்களேன் என்றார்.  அவரிடம் பேச்சுவாக்கில், புதிதாக எழுதிய கதைகளை தவிப்பு என்கிற பெயரில் POD புத்தகமாகக் கொண்டுவருவதாக இருப்பதாகக் கூறி ஒன்பது கதைகள் இருந்தும் 60-70 பக்கம் கூட வராது போல இருக்கிறதே, கிரவுன் சைஸை ஏன் இப்படி ஒழித்தே கட்டிவிட்டது இந்தப் பதிப்பக…