November 7, 2017 maamallan

1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில்  64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.  சுந்தர ராமசாமியின் பள்ளம் கிரவுன் சைஸில் எத்தனைப் பக்கங்கள்.  நீ எங்கே சுந்தர ராமசாமி எங்கே.  நியாயமான கேள்விதான். எனக்கு அவரது நட்சத்திர அந்தஸ்து இல்லை என்பது உண்மைதான். ஆனால் இங்கே கேள்வி அதுவன்று. இலக்கிய வாசகனுக்குத் தரம் என்பது பக்க அளவைப் பொறுத்ததா என்பதுதான் கேள்வி. ஆம் என்றால் சுராகூட எஸ்.ராவின் முன்னால் எடை போடக் காணமாட்டார் என்பது உண்மை என்று ஆகிவிடும். எஸ்.ரா தமது நாவல் புத்தக லே அவுட்டில் 461 பக்கங்களைத் தாண்டிற்றா தாண்டிற்றா என்று அதை எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கையிலேயே பதிப்பாளரை தினந்தோறும் கேட்டு…

October 26, 2017 maamallan

என் கதைகள் அனைத்தும் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன.  சில அழியாச்சுடர்களிலும் சில வெவ்வேறு தளங்களிலும் அனைத்தும் PDFஆக என் பிளாகில் நானே வெளியிட்டும் எல்லா கதைகளும் archive.org http://bit.ly/2zGi9ch சேமிப்பு கிடங்கில் இலவசமாகவும் இணையத்தில் கிடைக்கின்றன.  நான் அதிகம் எழுதியவனும் இல்லை. அதிகம் பிரபலமானவனும் இல்லை. கும்பல் சேர்ப்பவனும் இல்லை. ஆனால் என் புத்தகங்கள் இபுக்காக வெளியானதும் இந்த அல்சேஷனையும் விலை கொடுத்து வாங்க ஆளிருப்பது எப்படி என்றுதான் புரியவில்லை.  எல்லா இடத்திலும் இலவசமாகக் கிடைப்பதை இப்படிக் காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால், இதற்கு அன்பைத் தவிர வேறு எதைத்தான் காரணமாகச் சொல்வது. மிக்க நன்றி.

October 22, 2017 maamallan

நேற்று மாலை நண்பனின் மகளுக்கு பேலியோ பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். அதைத் தள்ளி நின்று கேட்டுக்கொண்டும் இருந்த எனக்குத் தோன்றியது அட பரவாயில்லையே என்று.  இன்று பேலியோ பற்றி நீங்கள் எழுதுங்களேன் என்றார் இன்னொரு நண்பர்.  சற்று முன் டிவியில் இருக்கும் என் பழைய நண்பர் பேலியோ பற்றி என்னிடம் கேட்டு ஒரு நிகழ்ச்சி தயாரிக்கும்படி கூறியதாக ஒரு பெண் நிருபர் கைபேசியில் தொடர்புகொண்டார்.  அலுவல் ரீதியில் எனக்குப் புகைப்படமே அதிகம். ஆண்டவன் புண்ணியத்தில் ஏதோ ஓடிக்கொண்டு இருக்கிறது என் பிழைப்பு. வீடியோ டிவியில் வருவதெல்லாம் கனவிலும் நினைக்கக்கூடாத காரியம் ஒய்வுபெறும் முன்பாக. ஆனால் அவருக்கு பேலியோவின் அடிப்படை, செயல்முறை பற்றி அரை மணிநேரம் கூறினேன். எல்லாம் நண்பர்கள் வழியாகவும் அனுபவரீதியாகவும் தெரிந்துகொண்டவைதாம். தெளிவாகவும் எளிமையாகவும் எழுதிவைத்தால் என்ன என்றுதான் தோன்றுகிறது.  இப்படியே, எடுத்ததையெல்லாம் எழுதிக்கொண்டே போகத் தொடங்கினால் இந்த டிசம்பருக்குள்ளாகவே ஏழெட்டு புத்தகங்கள் ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது.  இப்போதைக்கு…

October 15, 2017 maamallan

நான் இதுவரை எழுதியுள்ளவை அனைத்தும் maamallan.com இல் எவரும் வாசிக்க வசதியாக இலவசமாக உள்ளன. இவைபோக, https://ta.pratilipi.com/search?q=விமலாதித்த+மாமல்லன் https://m.dailyhunt.in போன்ற தளங்களிலும் நான் இதுவரை எழுதியுள்ள அத்தனை கதைகளும் என் காலத்துக்குப் பிறகும் https://archive.org/search.php?query=விமலாதித்த%20மாமல்லன் தளத்தில் இலவசமாக வாசிக்க முழுமையாக கிடைக்கின்றன. இன்றைய இளைய தலைமுறையின் தேர்வு அச்சுப் பிரதியைவிட இணைய வடிவமே என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இவர்களுக்கு முந்தைய தலைமுறைக்கும் அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இன்னமும் அச்சுப் பிரதியில் படிப்பதே அதிலும் குறிப்பாக தீவிர இலக்கியத்தை அச்சில் படிப்பதும் தம்முடைய பிரதியாக தங்களிடம் வைத்துக் கொள்வதிலும் இன்னமும் வியக்கத்தக்க ஆர்வம் இருக்கிறது. புதிதாக இலக்கியத்துக்கு வரும் வாசகர்களிடமும் இந்த ஆர்வம் இருந்துகொண்டு இருக்கிறது. பத்திரிகைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருந்தலும் நமக்கு பிரியப்பட்ட ஆசிரியர்களின் படைப்புகள் தொகுப்பாக வருகையில் அதை வாங்கிவிடுவது என்பது எனக்கெல்லாம் அந்தக் காலத்தில் நேர்த்திக் கடன் போல இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் கல்லூரிக்காலத்தில், வாங்கிப்…

August 27, 2017 maamallan

பண்ணிட்டான்டி உன்னையுமா என்னடி சொல்றே. அப்ப உன்னையும் பண்ணிட்டானாடி என்னையெல்லாம் எப்பவோ பண்ணிட்டான்டி உன்னை ஏற்கெனவே பண்ணிட்டான்னு எங்கிட்ட ஏண்டி சொல்லவேயில்ல என்ன சொல்லி என்ன பண்ணறது. பண்ணினது பண்ணினதுதானே என்னது உங்க ரெண்டு பேரையுமே பண்ணிட்டானா. சொல்லவேயில்ல. ஏன் எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்க. நாங்கள்ளாம் உங்களுக்கு அவ்வளவு அன்னியமா போயிட்டோமில்ல.  இப்படிதான் அவன் இண்ட்டர்நெட்ல எல்லாரையும் பண்ணிக்கிட்டு இருக்கான். அவனை இன்னிக்கு உண்டு இல்லேனு பண்ணிட்டுதான் மறு வேலை. வாங்க உடனே கமிஷ்னர் ஆபீஸுக்குப் போய் புகார் குடுப்போம். பிரதமருக்கு மெய்ல் குடுப்போம். அவன் ஆபீஸ் சீசிக்கு சிசி போடுவோம். இம்மீடியட்டா அவனை வேலைலேந்து சஸ்பெண்ட் பண்ணி பென்ஷன் வாங்கவிடாம பண்ணுவோம். நாங்க இருக்கோம் உங்க பின்னாடி. நீங்க வாங்க எங்க பின்னாடி. அங்கிள்ஜி அவன் குடும்பத்தை நினைச்சாதான் பாவமா இருக்கு. என்ன பாவம் வேண்டியிருக்கு இந்த மாதிரி நாய்ங்களுக்கெல்லாம். இவனையெல்லாம் உள்ள வெச்சி ப்ண்ணினாதான் புத்தி வரும். இந்த…

July 9, 2017 maamallan

சக்கர நாற்காலிக்கு மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னால் இருக்கக்கூடிய உண்மையான காரணம், இந்த உபகரணங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்பதுதான். எடுத்தவுடன், இதைப் பார்க்கும் எவருக்கும் இது ஒரு பெரிய முரண் போலத் தோன்றக்கூடும். ஆனால் இதன் பின்னால் இருக்கும் வரி விதிகளைப் பற்றித் தெரியவந்தால் இந்தத் தவறான எண்ணாம் அகலும். அபரிமிதமான உடல் எடையைக் குறைக்கக் கொழுப்பை உண்கிற பேலியோ டயட் என்கிற உணவு முறையைப் போன்றதுதான் இந்த வரி விதிப்பும். இந்த முறையில் 130க்கு மேல் எடை இருந்தவர்கள் கொழுப்பை உண்ணத் தொடங்கி மூன்று நான்கு மாதங்களிலேயே தங்கள் எடையை 90-80 கிலோவுக்கு இறக்கியிருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அதைப் போலவே, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் இந்த 5% வரியும், அந்தப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்காகப் விதிக்கப்பட்டதுதான். பேலியோ பற்றி எப்படிப் பெரும்பாலோருக்குத் தெரியாதோ…

July 9, 2017 maamallan

பேலியோவுக்கு வந்த பின்னர் வாராவாரம் வெண்ணெய் வாங்கியாக வேண்டிய நிர்பந்தத்தில் திருவல்லிக்கேணி பெரியதெரு ஷண்முகம் கடைக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. பத்து நாள் முன்பாக 500 கிராம் வெண்ணைக்கு 240 ரூபாய் என்றார்.  என்னங்க விலை ஏறிடிச்சா அஞ்சு நாள் முன்ன 230க்குக் குடுத்தீங்களே  ஒன்னாந்தேதி வரட்டும் இதே வெண்ணை 250 – 260க்குப் பொனாலும் ஆச்சரியமில்லை என்றார்.  ஏங்க  அதான் GSTனு ஒன்னைக் கொண்டாராங்களே  அதனால ஏங்க விலை ஏறணும்  பின்ன என்ன சார். வெண்ணெய் தானே காச்சினா நெய் ஆகுது.  வெண்னெய் வாங்கும் போது 12% வரி கட்டணுமாம். அதைக் காய்ச்சி நெய்யா விக்கும்போதும் 12% வரி கட்டணுமாம். 24% வரி போட்டு வித்தா யார் வாங்குவா. எப்படி வியாபாரம் செஞ்சு பொழைக்கிறது. என்ன அநியாயம் சார் என்று பொங்கிவிட்டார்.  வயதானவர் ஆயிற்றே என்று நானும் பொறுமையாகக் கூறினேன்.  நீங்கக் கட்டற 12% வரிக்கு பில்லை வாங்கி, நீங்கக் கட்ட…

July 2, 2017 maamallan

GSTக்கு முன் தமிழக ஓட்டல்களில் VAT 2% ST 5.6%மாக 7.6% தானே இருந்தது. GSTக்குப்பின் இப்போது SGST 9% CGST 9% என்று 18% வரி என்று ஆகிவிட்டதே. GST வந்தால் விலை குறையும் என்பது எவ்வளவு பெரிய புருடா என்கிறது ஒட்டுமொத்த பேஸ்புக்கும். அப்போதைய VAT 2% என்பது VAT கிரெடிட் எடுக்காதவர்களுக்கு மட்டுமே. அப்போதே பில்லுடன் வாங்கி VAT கட்டி அப்படிக் கட்டிய VATஐ கிரெடிட் எடுத்துக் கொண்டு இருந்த ஓட்டல்களுக்கு VAT 14.5% . அதனால்தான் பெரிய ஓட்டல்களில் 14.5% + 5.6% = 20% இருந்தது.  GSTயில், ஒட்டல் தொழிலில் வருடாந்திர வியாபாரம்  20 லட்சத்துக்குள்  இருப்பவர் பதிவு செய்யவும் வேண்டியதில்லை. கிரெடிட்டும் எடுக்க முடியாது. அவருக்கு GSTயும் கிடையாது. இது கையேந்தி பவனில் இருந்து சின்ன ஓட்டல்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும். 20 முதல் 75 லட்சத்துக்குள் இருப்பவர் கட்டாயம் பதிவு செய்தே…

May 28, 2017 maamallan

இன்று காலையில் ஓலா ஓட்டுனர் போன் செய்திருந்தார். பிடித்து செம கடி கடித்துவிட்டேன்.  ஹலோ சார்  சொல்லுப்பா  எப்படி இருக்கீங்க சார்  நல்லாதான் இருக்கேன். போன ஞாயித்துக்கிழமை உன் தம்பி போன் பண்ணியிருந்தான் ஆமா சார்  கரெக்டா அப்பதான் ஆப்பரேஷன் ஆரம்பிக்கப் போற நேரம் அதான் அப்பறம் பேசுன்னுட்டேன்  கண் ஆப்பரேசனா சார்  சேச்சே இது ஆபீஸ் ஆப்பரேஷன். பெரிய கும்பலை ரவுண்டு கட்டவேண்டி இருந்த ஆப்பரேஷன். அது கிடக்கட்டும். என்னா விஷயம் சொல்லு  ஒன்னுமில்ல சார் சும்மா…  யோவ் சும்மா எவன்யா போன் பண்ணுவான். எதுக்காகப் பண்ணினேனு நேரா மேட்டரை சொல்லு  இல்ல சார். மாமா உங்களைப் பாக்கணும்னாரு  எதுக்கு  இல்ல சார் உங்களை நேர்ல பாக்கணும்னு…  நேர்ல எதுக்குப் பாக்கணும். கேஸ் விஷயமாதானே  ஆமா சார்  யோவ் உனக்கு எத்தனை தடவை சொல்றது. நீ ஒரு மாசம் முன்ன போன் பண்ணினப்பவே சொன்னேன். கேசை ஒடைக்கணும்னா நாலு வருஷம்…

April 7, 2017 maamallan

பேலியோ உணவு முறைக்கு வந்து, இருபது நாள் கூட ஆகாமல் திடீரென்று சில தினங்கள் முன்பாக ஒரு நாள் பிபி மாத்திரை எடுப்பதை நிறுத்திவிட்டேன்.  கடைசியாக, அடையாரில் இருக்கும் எங்கள் டாக்டரிடம்  21.07.2016 அன்று பார்த்துக்கொண்டதுபடி என் பிபி 120/80. நவம்பர் 2013ல் பிபி வந்தபோது எடுத்த ரீடிங் 180/90. அதாவது, கிட்டத்தட்ட 15-20 தினங்களாக, இரவு பகலாக கேஸ் காபந்து கைது ரிமாண்ட் என்று போதுமான தூக்கமின்றி,  தலை சூடாகிக்கொண்டே இருந்து, ஒரு நாள் இரவு திடீரென ஜுரம் ஓவராகி, பெஸண்ட்நகர் சந்தோஷ் ஹாஸ்பிடலுக்குப் போய் ஐஸ் வைத்து ஜுரம் இறக்கி, பிபி இருக்கிறது எனக்கூறிக் கொடுத்த மாத்திரையை, தொடர்ந்து எடுத்துக்கொள்ளச் சொல்லாததால் விட்டுவிட்டு, திரும்ப ஜுரம் வரவே அடையார் மருத்துவரிடம் சென்று காட்டியபோது எடுத்த ரீடிங் 180/90.  அவர் முதலில் பத்து பைசா மாத்திரையை எழுதிக் கொடுத்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து திடுப்பென ஒரு நாள் கால் வீங்கவே, ஓடிப்போனேன்….