April 2, 2017 maamallan

நமது நலம்விரும்பி, கான்ஃப்ரென்ஸ் கால் போட்டார் பேலியோ டயட்டீஷியனான அவரது நண்பருக்கு ஹலோ  வணக்கம் நான் மாமல்லன்  வணக்கம் நான் சவடன் பேசறேன். சவடன் பாலசுந்தரம். உங்க பிளட் ரிப்போர்ட்டைப் பார்த்தேன்  சரிங்க  இதுல முக்கியமா மூணு விஷயம்  சொல்லுங்க  மூணுலையும் முக்கியமான விஷயம் உங்க ரிப்போர்ட்டல 7னு இருக்கு. ஆகவே நீங்க டயபடிக் பேஷண்ட்டு  7ங்கறது… என்னங்க… டயபடிக்தான்  6-7 குட் கண்ட்ரோல் 7-8 ஃபேர் கண்ட்ரோல்னுதானே போட்டிருக்கு.  ரிப்போர்ட்ல அப்படிதாங்க போட்டிருக்கும் ஆனா இது டயபடிக்தான். இந்த ரிப்போர்ட்டை டாக்டர்கிட்ட எடுத்துக்கிட்டுப் போனா உங்களுக்கு XXX மாத்திரை குடுப்பாரு.  நீங்க டாக்டரா இல்லை நான் டாக்டர் இல்லை…  அப்பறம் எப்படி இந்த ரிப்போர்ட்டை வெச்சி டயபடிக்குனு சொல்றீங்க நான் டாக்டர் இல்லை. ஆனா எங்க குடும்பத்துல வெளில நிறைய பேருக்கு… நீங்க டாக்டரே இல்லை. அப்பறம் எப்படி இதை டயபடிக்னு சொல்றீங்கனுதானே கேக்கிறேன்.  இல்லைங்க இப்ப நீங்க பேலியோவுக்கு…

March 29, 2017 maamallan

‪கவிஞருக்கு வீடு கிடைக்கலையாமே ‬ ‪ஆமா ‬ ‪அப்பறம் எப்படி இன்னும் தேதி போட்டுக் கவிதை எழுதாம இருக்காரு ‬ காலாகாலமா ‪கவிதை தவிதையா பேஸ்புக் போஸ்ட்டா எழுதி போரடிச்சிருச்சாம் இந்த தபா நேரடியா கவிதைத் தொகுதியாவே எழுதிக்கிட்டு இருக்காராம் ‬ ‪யோவ் நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே எதையும் டீப்பா புரிஞ்சிக்கத் தெரியாதா ‬ ‪ஓ நீ அந்த வீட்டைச் சொல்றியா வீடு பேறு வீட்டை. அது எப்படியா கிடைக்கும் இருக்கும்போதே ‬ ‪சமூகச் சிந்தனையாளரா இருக்காரு டிவில. மேடைப் பேச்சாளரா இருக்காரு திமுகவுல. இலக்கியவாதியா பத்திரிகையாளரா பதிப்பாளரா கலக்கறாரு பேஸ்புக்குல. அவுரு நினைச்சா இது கூடவா கிடைக்காது ‬ ‪அய்யா சாமி ஆள விடு எனக்கு போட்டோ கிடைக்காமப் பண்ணிடுவே போலயிருக்கே அடுத்த புக்ஃபேர்ல ‬ ‪அடச்சீ அல்ப்பை. புக்ஃபேருக்கு இன்னும் 9 மாசம் இருக்கு அதுக்குள்ள எட்டு தடவை சண்டை போட்டு ஒம்போது…

March 28, 2017 maamallan

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான சில தகவல்களை விசாரிப்பதற்காக, சற்றுமுன் ஆங்கில இந்து பத்திரிகையிலிருந்து நிருபரொருவர் தொடர்புகொண்டார். பேசி முடித்தபின்,  எப்படி இருக்கிறார் அந்த ஊபர் டிரைவர்  ஊபரா  சாரி ஓலா டிரைவர்  நல்லா இருக்காரே. காருக்கு எட்டு ஒன்பது மாச டியூ கூட கட்டிட்டாரே  நல்ல காரியம் சார் நீங்க செஞ்சது  நான் என்ன செஞ்சேன் எல்லாரும் செஞ்சாங்க  இந்துல மட்டும் அது வராம இருந்திருந்தா அந்தப் பாவம் அரெஸ்டே ஆகியிருக்காது அந்த சமயத்துல நான் லீவுல இருந்தேன். எனக்கு விஷயமே தெரியாது. வந்து விசாரிச்சப் பிறகுதான் தெரிஞ்சிது  அந்த ரிப்போர்ட்டரும் புதுசு போல இருக்கு. ஸ்வாதி மர்டர் நடந்து முடிஞ்ச சமயத்துல, நெட்ல ஈசியா கிடைச்சிருக்கிற டைமிங்கான மேட்டர் போயிடுமேங்கற டென்ஷனோ என்னவோ தடதடனு ஒரு சைடாவே எழுதிப் போட்டுட்டாங்க.  அதுக்கு அப்பறம் JCயை மீட் பண்ணினப்ப இதையேதான் சார் சொன்னாரு  என்னன்னு  இந்து அப்படி பண்ணியிருக்க கூடாது. அதர்…

March 27, 2017 maamallan

90களில் எனது நண்பர், தமிழ் வாராந்திரப் பத்திரிகையொன்றில் வேலை பார்த்துவந்தார்.  பத்திரிகை முதலாளி ஒருமுறை அவரிடம் கூறினார். ஏம்பா நம்ம பத்திரிகைல இலக்கியவாதிகள் கதை கட்டுரையெல்லாம் வருமே. இந்த திருவனந்தபுரத்துல பாத்திர கடை வெச்சிருக்காரே அவர் கதையெல்லாம் கூட வந்திருக்கே  ஆமாங்க. ஆ மாதவன்  ஆ அது மாதிரி எழுத்தாளர்கள் கிட்டையெல்லாம் கேட்டு வாங்கிப் போடலாமே  சரிங்க  இதன் தொடர்ச்சியாக அந்த வெகுஜனப் பத்திரிகையில் இலக்கிய எழுத்தாளர்ளிடம் கதை கட்டுரைகள் கேட்டு வாங்கிப் போடப்பட்டன.  அந்த வரிசையில் அசோகமித்திரனிடமும் ஒரு கட்டுரை கேட்டு வாங்கிப் போட்டிருந்தார்.  சில வாரங்கள் கழித்து, வெளியான  படைப்புகளுக்கான வெகுமதி இன்னின்னாருக்கு இவ்வளவு என்று எழுதி எடுத்துக்கொண்டு முதலாளியிடம் சென்றார்.  என்ன இவருக்குப் போய் 500 ரூபா போட்டிருக்கே  அதிகமாகப் போட்டுவிட்டோம் திட்டு விழப் போகிறது என எண்ணியபடி நின்றிருந்தவரிடம் முதலாளி சொன்னார்.  இவுரு சீனியர் எழுத்தாளரில்லே.  ஆமா சார்.  நம்ம பத்திரிகைலையே இவர் கதையெல்லாம் கூட…

March 27, 2017 maamallan

அசோகமித்திரன் தமிழ்ச் சமுதாயத்தால் கொண்டாடப்படவில்லை. ஏன் கொண்டாடப்படவில்லை. அவர் பிராமணர் என்பதால் என்பது போன்ற ஒரு அயோக்கியத்தனம் இருக்கவே முடியாது.  ஆண்டுகொண்டிருந்த திராவிட அரசுகள் அசோகமித்திரன் புத்தகங்களை நூலகத்திற்கு வாங்கக் கூடாது என தடை விதித்தனவா. இல்லை அசோகமித்திரன் எழுதத் தொடங்கிய 1956லிருந்து திராவிட அரசுகள்தான் இருந்தனவா. எழுத்துலகில் அசோகமித்திரன் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டாரா. மீதி எழுத்தாளர்களுக்கெல்லாம் அவர்களின் எழுத்துக்காக கோபுரத்தில் தூக்கி வைக்கப்பட்டார்களா.  அசோகமித்திரன் எழுத்தை முழுநேர தொழிலாக எடுத்துக் கொண்டார். மற்றவர்கள் வயிற்றுப்பாட்டுக்கு ஒரு வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மற்றவர்கள், இலக்கியத்தில் இருந்தும் சிரமமின்றி இருந்தது எழுத்தால் அல்ல. அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த வேறு வேலையால். இதே கேடுகெட்ட தமிழகத்தில்தானே பேனர் வைக்காத குறையாய் சுஜாதா வாழ்ந்தார். பாலகுமாரனுக்கு என்ன குறை பாப்புலாரிட்டியில். சாண்டில்யன் தொடர் ஆரம்பம் என்ற அறிவுப்பு வந்தால் குமுதத்தின் விற்பனை எகிறியது எங்கே இத்தாலியிலா. ஏன் அவர்களெல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா. அவர்களெல்லாம் பிராமணர்களில்லையா….

March 26, 2017 maamallan

வணக்கம் நான் ஜெயமோகன் பேசுறேன் .. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வந்த எழுத்தாளர்களில் இருவரைத்தான் சந்தேகமில்லாமல் மேதைகள். உலக அளவில் எந்த மொழியிலும் எந்த காலத்திலும் எழுதிய மகத்தான எழுத்தாளர்களுக்கு சமானமானவர்கள் என்று நான் சொல்வேன். ஒருவர் புதுமைப்பித்தன், இன்னொருவர்  அசோகமித்திரன். தமிழில் பொதுவாய் எழுதக்கூடிய எல்லா எழுத்தாளர்களும் ஒரு ராக்கெட் போல அவர்களுடைய ஆரம்ப விசையை கொண்டு மேலெழுவார்கள்.  அதன் பிறகு அந்த விசை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அவர்களுடைய எழுத்து ஒரு தேக்க நிலை அடையும். முதல் 15 வருடங்களுக்குப்பிறகு புதிதாக ஒன்றை எழுதிய எழுத்தாளர்கள் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் .சிலருக்கு இன்னொரு தொடக்க காலம் இருக்கும் சுந்தர ராமசாமி போல. ஆனால் எழுத வந்த முதல் கதையிலிருந்து இன்று தனது 86ஆவது வயதில் இறக்கும் தருணம் வரை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய   படைப்பூக்கத்துடன் இருந்த படைப்பாளி என்று  அசோகமித்திரனை சொல்ல முடியும். அவருடைய படைப்புலகில் ஏற்றமோ இறக்கமோ…

March 26, 2017 maamallan

அப்புறம் எப்படி, இந்தியனாக இருக்கும் எனக்குப் புரிகிற, ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை கதை, இலங்கையராக இருந்தும் உங்களுக்குப் புரியவில்லை.  இதற்கு, என் வயதும் அனுபவமும் இலங்கைப் போரை ஆரம்பம் முதலே பார்த்துக்கொண்டு இருப்பவன் போன்ற காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணம் வேறு.  இலக்கியத்தை, விகடன் குமுதம் பேஸ்புக் போல விறுவிறுவெனப் படிக்காதீர்கள். வார்த்தைகளைப் படிக்காதீர்கள். பொறுமையாய்ப் பொருளைப் படியுங்கள். கண்ணால் படிக்காதீர்கள். மனதாலும் இதயத்தாலும் மூளையாலும் படியுங்கள்.  என் 19 வயதில் ‘மாதக் கடைசியின் மாலைப் பொழுதில்’ என்கிற சின்னஞ்சிறு கதையொன்றை எழுதி, அது ஞாநி, நம்பிராஜன் எல்லாம் வேலை பார்த்த, இந்துமதி ஆசிரியராக இருந்த அஸ்வினி வாரப் பத்திரிகையில் பிரசுரமும் ஆகிற்று.  மிதந்து கொண்டிருந்த என்னை, விக்ரமாதித்யன் கேட்டார், புதுமைப்பித்தனைப் பதித்திருக்கிறீர்களா என்று.  ஒன்றிரண்டு என்றேன். பொடிப்பயல் ஆயிற்றே என்கிறக் கருணை சிறிதுமின்றி, புதுமைப்பித்தனைக்கூடப் படிக்காம எழுத வந்துடறீங்க இப்ப வரவங்கள்லாம் என்று செருப்பால் அடித்துத் தரையில் வீழ்த்தினார். அவமானம் தாங்காமல் உள்ளூர அழுதபடி எழுதுவதை நிறுத்தினேன்.  ஆனால்…

March 18, 2017 maamallan

முந்தாநாள் வீட்டுக்கு வரும்போதே 8 மணி பக்கமாக ஆகிவிட்டது. அலுவலகத்தில் கடுமையான வேலை காரணமாக சரியான தோள்வலி. ஆனாலும், லேப்டாப் பேகை வீட்டில் வைத்துவிட்டு அப்படியே அம்ஷன்குமாரைப் பார்க்கக் கொட்டிவாக்கம் போனேன். அவரிடமிருந்து 250/-க்கு தெட்சிணாமூர்த்தி டிவிடியை வாங்கிக்கொண்டேன். பத்மனாப ஐயர் வெளியிட்ட புத்தகத்தை அம்ஷன் இலவசமாகத் தந்தார்.  இந்தப் புத்தகத்தின் 39-40 பக்கங்களில், லலிதாராம் எழுதி, 2014ல் தினமலரில் வெளியான, தெட்சிணாமூர்த்தி பற்றிய கட்டுரை, ஸ்கிரீன்ஷாட்டுடன் வெளியிடப்பட்டு உள்ளது. இதை, பத்மனாப அய்யர், லலிதாராமிடம் அனுமதி கேட்டுப் பயன்படுத்திகொண்டு இருக்கிறார். அதை எப்படி வெளியிட்டு இருக்கிறார்.  லலிதாராமின் கட்டுரையிலிருந்து மேற்குறிப்பிட்டு இருக்கும் பகுதியை அப்படியே திருடி, எம்.டி.எம் எப்படி தம்முடைய கட்டுரையில் காப்பி பேஸ்ட் செய்து, இருக்கிறார் என்பதையும் பாருங்கள்.  இதில், பிள்ளை என்கிற வார்த்தையைத் தெருப் பலகை போல நீக்கி இருப்பது மட்டுமே எம்.டி.எம்மின் இசை ஆராச்சிக் கொடை. இந்தக் காப்பி பேஸ்ட் உழைப்பு அற்பத்தனத்தோடு மட்டும் நிற்கவில்லை…

March 10, 2017 maamallan

பகவான் பாலகுமார சுவாமிகள் பூர்வாசிரமத்திலே பரபரப்பான பாக்கெட் நாவல் எழுத்தாளராக இருந்த நேரம். 80களின் இறுதி 90களின் தொடக்கமாக இருக்கலாம். எதோ ஒரு ஓட்டலின் அறைக்கு வெளியே இருந்த பால்கனி நடையில், இரண்டு நண்பர்களைப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் உலக சினிமா ஆர்வலர். மற்றொருவர் யார் என்பதை எப்படிச் சொன்னாலும் எளிதில் பாலகுமாரனுக்கு அடையாளம் தெரிந்துவிடும். அனாவசிய தர்மசங்கடத்தைத் தவிர்க்க வேண்டி, வீரமணி ராகுகாலம் பார்த்த நம்பினால் நம்புங்கள் கட்டுரையில் எப்படிப் பெயரை வெளியிடுவதைத் தவிர்த்து, பெரியவர் என்று ஏழுதினேனோ, அதைப் போலவே இதிலும் இவரது அடையாளத்தைத் தவிர்க்க வேண்டி, இவரை இந்தக் கட்டுரையில் மற்றொருவர் என்றே குறிப்பிடுகிறேன் உலக சினிமா ஆர்வலருக்கு அப்போதுதான் மணமாகி இருந்தது. ரொம்ப அமைதியான அடக்கமான நபர். எனக்கு ரொம்ப நெருக்கம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவரை வழியனுப்பி விட்டு கொஞ்ச நேரம் மற்ரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். உலக சினிமா, பாலகுமாரனின் சந்திப்பிற்கு இடையில் எதோ தனிப்பட்ட…

March 9, 2017 maamallan

‪பொறுக்கி என்று முதலில் ஆண்ட்டி சொன்னார்கள். அதனால்தான் ஓலா டிரைவர், ஆண்ட்டி கழுத்தை அறுத்துடுவேன் என்று அடுத்து சொன்னான் என்கிற ‘பொய்’யைச் சொல்லி ஊரை ஏமாற்றினான் மாமல்லன். ஏனென்றால், ‘விலாசினி ரமணி என்னை பொறுக்கி என்று திட்டவுமில்லை; நான் விலாசினி ரமணியை கழுத்தை அறுத்துருவேன் என்று மிரட்டவும் இல்லை’ என்று அந்த ஓலா டிரைவரே சொல்லி விட்டார் எனவே மாமல்லன் ஒரு புளுகு மூட்டை என்கிறது ஆல் பர்பஸ் அங்கிள் கும்பல் இப்பொழுது. இது ஏதும் இவர்களின் புதிய கண்டுபிடிப்பா. புதிய சாட்சியமா. இது, அந்த ஓலா ஓட்டுனர் பெயிலில் வெளியில் வந்த சில நாட்களில் வளர்மதி எடுத்த இந்த நேர்காணல் வெளியாகி 7 மாதங்களாகிவிட்டனவே. இதை ஏதோ புதிய தரவு போல வைத்துக்கொண்டு செய்கிற கோட்டிக்காரப் பயலுக்கு பதில் வேறு ந்வேண்டுமா. சட்டம் படித்த முட்டாளுடைய புட்டத்தின் பின்னே லைன் கட்டி நின்று கூவும் இந்த ரயில் பெட்டிகள் தர்க்கத்தில்…