November 14, 2010 maamallan

குரல் விளையாட்டு பொதுவாகவே மேலை நாட்டு சங்கீதம் என்றாலே காட்டுக்கத்தல் என்கிற பாமரக் கருத்து ‘படித்த’ பாவங்களிடம் இருக்கிறது. சுய நிரப்பு வெற்றிடங்கள். திறந்த மனமே அனைத்திற்கும் திறவுகோல். இதே பாடலை படமாகப் பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்கவும் இசை விரும்பிகள் பலரால் உலக கீதமாகக் கருதப்படும் இந்தப் பாடலை படமாக எடுத்து எப்படி கெளரவப்படுத்தி இருக்கின்றனர்.  JOHN LENNON”Imagine”Imagine there’s no heavenIt’s easy if you tryNo hell below usAbove us only skyImagine all the peopleLiving for today…Imagine there’s no countriesIt isn’t hard to doNothing to kill or die forAnd no religion tooImagine all the peopleLiving life in peace…You may say I’m a dreamerBut I’m not the only oneI hope someday you’ll join usAnd the world will be…

October 20, 2010 maamallan 3Comment

சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா?சரிசோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா *** பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்மரம் பட்ட சாலைக் கென்னைஅனுப்பு முன்பேரைக் கொஞ்சம்சோதித்துப் பாருங்கள் சார் *** யோசனை உனக்கென்ன தோன்றுது?கருத்துக்கு மாறாக போலீசார்கள்கட்டிவைத்து கையெழுத்து வாங்கலாமா எனக்கென்ன தோன்றுது?வருத்தத்துக்காளானான் புலவன் என்றால்யாப்பிலொரு கவி பாடச் சொன்னால் போச்சு *** கீழ்வெண்மணி மல்லாந்த மண்ணின் கர்ப்பவயிறெனத் தெரிந்த கீற்றுக்குடிசைகள் சாம்பற் காடாய்ப்போயின புகையோடு விடிந்த போதில்ஊர்க்காரர் திரண்டு வந்தார் குருவிகள் இவைகள் என்றார்குழந்தைகள் இவைகள் என்றார்பெண்களோ இவைகள்? காலிகன்றுகள் இவைகள் என்றார் இரவிலே பொசுக்கப்பட்டஅனத்துக்கும் அஸ்தி கண்டார்நாகரிகம் ஒன்று நீங்க *** 8 தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்தூக்கத்துக்கப்புறம் யாருடா சித்தர்?தூக்கத்துக்கப்புறம் என்னான்னு கேளுதூக்கிக் காட்றேன் தெரியுதா பாரு மேலே இருக்கும் கவிதைகளை எழுதியவரின் பெயர் ஞானக்கூத்தன்8 ம் நெம்பர் கவிதையில் இருக்கும் பொறுப்பற்ற தன்மையைப் பார்த்தீர்களா! இது வெறும் பொறுப்பற்ற தன்மை மட்டும்தானா? இந்தக் கவிதையைப் படிப்பவர்கள் பெண்களாக இருக்கலாம் குழந்தைகளாக…

October 17, 2010 maamallan 3Comment

”யப்பா சர்கோசி என்ன எழவு வேணுமோ கொடுத்து தொலைப்பா டெய்லி கொய்யோன் கொய்யொன்னு ஸ்ட்ரைக் பன்றானுங்க” இதுதான் என்னால் ரி-ட்விட்டப் பட்ட ட்விட்.ஒருவனுக்கு பிடித்த ட்விட்டை ரி-ட்விட் செய்ய முன் அனுமதி எந்த மரத்தடியில் வாங்க வேண்டும்?சர்காஸமாக ஒருவர் ட்விட் எழுதினால் ரி-ட்விட்டக் கூடாது என்பது எந்த மண்டபத்து சட்டம்? அதை  மட்டுமே  ரி-டிவிட்டுவது, உள்நோக்கம் கொண்டதா. ட்விட்டர் பற்றிய தவறான புரிதலை ரி-ட்விட் கொடுத்துவிடும் எனில் அதைப்பற்றிய முதல் கவலை யாருக்கு இருக்க வேண்டும்? அந்த கவலை இருக்கிற பட்சத்தில், ட்விட்டரே அதை இயற்றாமல் இருந்திருப்பாரே.ட்விட்டில் சர்கோசி என்றுதான் இருந்தது சர்காஸம் என்றில்லை. ட்விட்டர் தனது முன்னனுமதி இன்றி ரி-ட்விட்டக் கூடாது என்று முன் நிபந்தனை விதித்திருந்து, அதை மதியாமல் ரி-ட்விட்டினால் தவறு.இதுகூட நம் போன்ற மாக்களுக்குதான் பொருந்தும். பாட்டாளி மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வை உய்விப்பதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு அனுதினமும் இணையத்தின் கட்டற்ற வெளியில், ட்விட்டர் சந்துகளில், பஸ்ஸின்…

October 13, 2010 maamallan 7Comment

திண்ணையின் ஈஸிச்சேரில் சாவகாஸ பத்திரிகை விரிப்பு. எதிரில் திறந்த வெளியில் திண்ணையை ஒட்டி, சாவகாஸமாய் வெயிலில் காயும் பொருளை மேயும் மாடு. பேப்பர் தாழ்த்தி கண்ணாடிக்கு மேல் கீழ்க்கண்ணால் பார்த்துவிட்டு தாமஸமாய் ஒரு விளி சாந்தம்மே… வாசற்படியில் வந்து நிற்கும் சகோதரியிடம் நிதானமாய் கழுத்தொடித்து, …பஷு என்றபடி, மாடு நோக்கி பார்வை சுட்டல். அவள் பதறியடித்துக் கொண்டு மாட்டை விரட்டல் கைப்பிடி உதறலில் நடுங்கும் கண்ணாடியில் தெரியும் மீசையில் ஒரு நரை. அதைத் துண்டிக்க கத்தரியின் துழாவல். கண்ணாடி மீசை கத்தரி அவன் நாம் என அனைத்தும் வெவ்வேறு விதங்களில் கோணங்களில் அவஸ்த்தைப்பட்டு நீக்கப்படுகிறது நரை. வீட்டுக் காம்பவுண்டைவிட்டு வேட்டி தூக்கி, கிராமத்து ஈர மணல் தரையில் நடக்கும் செருப்புக் கால்கள். தெருவில் எதிர்ப்படும் மழைக்குட்டை. நின்றுவிடும் நடை. தாண்ட முடியாத அளவிற்கு நீளமாய் நிற்கும் நீர்; சுற்றிபோக வழியற்ற அகலத் தேங்கல். நனையத் திகைத்து நின்ற நடை. எதிரில் வரும்…

September 25, 2010 maamallan 15Comment

மரத்தடி அராஜகம் செய்து பல்லியை அடித்தால் நியாயத்தின் வெற்றி அராஜகம் செய்யும் பருந்திடம் அடிபட்டால் தியாகத்தின் வெற்றி புதுசு பூந் துடைப்பம் வாங்கினேன் வீடு பெருக்க நைஸான குப்பையும் நறுவிசாய் போகுமாம் விற்கும்போது தாடிக்காரன் சொன்னான் பீடிக்காரனும் சொன்னான் இருந்த குப்பையை துடைப்பம் பெருக்கிற்று துடைப்பம் போட்ட குப்பையை எந்த துடைப்பம் பெருக்கும்? தவிக்கும்போது தாடிக்காரனையும் காணோம் பீடிக்காரனையும் காணோம் காகம் கரைவது காகத்தின் பிறவிக் குணம் கும்பல் சேர்க்க குரல் கொடுக்கும் அடிவயிற்றிலிருந்து தன்குரலின் நாராசம் தெரியாதது வாய் இருக்கும் காது கிடையாது தலையில் இருக்கும் ஓட்டைகளைக் கருணையுடன் நாம்தான் காதாய் கருதிக்கொள்ள வேண்டும் வினவ மட்டுமே தெரியும் விவாதித்தால் விடையளிக்கும் பாவனையில் திரும்ப ரெண்டு வினவும் பொதுவெளி எல்லோருக்குமானது என்கிற விவஸ்தையற்றது வருவோர் போவோர் மேல் வெட்கமின்றி எச்சமிடும் அடச்சீய் என்று விலகினால் வெற்றிவெற்றி என ஆர்ப்பரிக்கும் மரக்கிளையில் உட்கார்ந்திருப்பதால் மரமே தனது என தர்கிக்கும் மரம் முழுக்க…

September 24, 2010 maamallan 10Comment

எல்லா பிராமணர்களும்  கருவறைக்குள்  நுழைய  முடியுமா? முடிகிறதா?அப்படி இருக்கையில் பிராமணன் பிராமணன் எனக் கூப்பாடு போடுவது பித்தலாட்டமா இல்லையா? எல்லா பிராமணனும் கருவறைக்குள் நுழைய முடிவதில்லை ஆனால் நுழைபவன் எல்லாம் பிராமணனாக மட்டுமே இருக்கிறான். இதைத்தானே சொல்ல வருகிறீர்கள். கோவிலுக்கு  ஆகமவிதிகள்  சரியா  தவறா? ஆகமவிதிகளையே  தூக்கி எறிவதா  அல்லது  ஆகமவிதிகளை  வைத்துக் கொண்டு  எல்லா இந்துக்களையும் அனுமதிப்பதா அல்லது பூசைசெய்ய சாதி வித்தியாசமின்றி தகுதி பெற்றவர்களை மட்டுமே அனுமதிப்பதா? இது மக்களிடம் வைக்கவேண்டிய விவாதப்பொருளா சட்டத்தைத் தானே கையில் எடுக்க வேண்டிய சட்டாம்பிள்ளைக் காரியமா? ஸ்ரீரங்க பூமியிலே கடவுள் மறுப்பாளரான பெரியாரின் சிலையே இருக்கக்கூடாதென்ற எதிர்ப்பை தவறு என்றேன். அதை சொல்லக்கூட எந்த தாஸில்தாரிடம் கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க வேண்டும்?   அதே போல் கருவறையில் அம்பேத்கர் பெரியார் படங்களை வைத்ததும் தப்பு என்றேன். இதில் என்ன கொலைபாதகம் செய்துவிட்டேன் நான். கருவறை, கடவுள் மறுப்பாளரான உமக்கு, ஒரு பொறுட்டல்ல. கோடானுகோடி…

September 23, 2010 maamallan 13Comment

ஜானு மாமி said…  23 மாமல்லன், நீங்க ஒரு மாமா மல்லன் என்ற ரீதியில் வாசகர் கடிதங்கள் வர ஆரம்பிச்சுட்டதோல்லியோ? அவாளுக்கு இது போல நிரம்ப வருதாம்.#சும்மா தமாசுக்கு.கோவிச்சுக்காதீள்! விமலாதித்த மாமல்லன் said… 26 ஜானு மாமி அம்பி, மாமி  பேர்ல  வந்து,  வாஞ்சையோடா  மாமான்னு  கூட்டு, கைக்காரியத்தயெல்லாம்  உட்டுட்டு, தனி  பதிவே  எழுத  வெச்சுட்டயே ஒஞ்சமத்து ஆருக்கு வரும் சொல்லு. யோவ் ட்விட்டர்ல என்னைக் காச்சு காச்சுன்னு காச்சுட்டு இங்கியும் கண்டினியு பண்றியா. சரி விதி வலியது. என்னைப் போலவே நீயும் பண்ற ஒரே விஷயம் அதான் பஸ்ஸுல மாட்டிண்டியே ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்” – இப்பயும் பாரு, தேள் ளுக்கு பதிலா தீள் காட்டிக்குடுத்துடுத்தே! அது சரி கமல்கஸான் எப்பப்பா புரட்சிகர படம் எடுத்தாரு. சின்ன புரட்சிங்கோ சுருட்டு தாடிக்காரனை ஐடி போட்டோல வெச்சிகினு திரியறாப்பல இது இன்னா ’ஜானு மாமி’ ஒளவை சண்முகி.  எந்திரன்  எதிர்ப்பு + அப்பிடியே …

September 13, 2010 maamallan 10Comment

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள. கூடுவிட்டு கூடு பாய்ந்து கோபத்தில் வவ்வவ்வெள. சர்வரோக நிவாரணியாய் கூவி விற்க வவ்வவ்வெள. இது உன் இடமில்லை வவ்வவ்வெள. ராஷ்ட்ரபதி பரிசின் கனவென வவ்வவ்வெள. உனக்கிங்கே இடமில்லை வவ்வவ்வெள. அவமான மிரட்டலாய் வவ்வவ்வெள. ஒரு வவ்வவ்வவெள, உள்ளே நுழைந்ததும் எத்துனை வவ்வவ்வெள. பெரும்பாலும் வவ்வவ்வெள தன் பயத்தில் இருந்தே பிறக்கிறது. எல்லா வவ்வவ்வெளக்கும் தெளிவான நோக்கம் இருக்கிறது. தன் இருப்பை ஸ்தாபிக்க வவ்வவ்வெள. விஸ்தரிக்க வவ்வவ்வெள. கூட்டத்தைக் கலைத்து, பிரித்து, எதிர்ப்பை விரட்டி, மிரட்டி, ஆதரவைத் திரட்ட வவ்வவ்வெள. உயர்ந்த நோக்க வவ்வவ்வெள. ஆழ்மனத்தின் வவ்வவ்வெள. கேளிக்கையைப் பார்த்து இலக்கியம் வவ்வவ்வெள. இலக்கியத்தைப் பார்த்து மக்கள் இலக்கியம் வவ்வவ்வெள. யாரையுமே பார்க்காமல் நாளைய தினத்தை எப்படி நகர்த்துவதென திகைப்புடன் முன்னகரும்…

September 12, 2010 maamallan 3Comment

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன எதிர்ப்பாய் பொடியர்களின் கல் எறி காலடித் தடம் பதிப்பதற்கு காததூரம் முன்பாக கல் ரோஜாக்கள் விழுந்து சிதறின. கல் விழுந்தெழுந்த புழுதியில் கண் கரித்ததெனினும் கருமமே கண்ணாக முன்னேறிக்கொண்டு இருந்தது பீரங்கி ஊரும் எறும்பு ஒதுங்க இடமின்றி திகைத்தது நில் என் உயிருக்கு உத்திரவாதம் சொல் என்றது யுத்தபூமியில் இருந்ததே குற்றம் விழுந்த கல்லின் சில்லொன்று தெரிக்க இரும்புக் கவசம் க்னங்கென ஒலியெழுப்பிற்று நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு கண்சிவந்து கனன்ற பீரங்கி முன்னேறிற்று எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில் ****************************************** நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு

September 10, 2010 maamallan 94Comment

கேள்விக்குறி மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை கிழித்தீர்களா?     திரு வேட்டைக்காரரே மதார் பொதுவெளியில் எழுதினாரா? அவங்க குழுமத்துல எழுதிக்கிட்டதைப் பொதுவெளி என்கிறீரா? அந்தக் குழுமத்துல வினவு மெம்பரா? நான் கூட உள்ள போயி என்ன நடக்குதுன்னு நேரடியா தெரிஞ்சிக்கதான் போனேன் உங்க மொதல் பதிவுக்கு அப்புறம். கதவு தெறக்கவே இல்லை . //மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? //சாந்திக்கும் சண்டாளர்களுக்குமான சண்டையில் வினவும் சாந்தியும் தான் முதலில் மதார் பெயரை ’வினவு’ தளத்தில் இழுத்தது. ஒரு பொய்யை நாங்கள்ளாம் தனித்தனியா நூறு தடவதான் சொல்ல முடியும் வினவின் ஆள்பலத்தை வைத்து கோடி தடவை சொல்லி உண்மையாக்கி கோயபல்ஸ்ஸையே கூனிக்குறுக…