September 13, 2010 maamallan 10Comment

வவ்வவ்வெள என்ற தன் குரைப்பில் அஞ்சி, சூரியன் நகர்வதாய் கர்வம் மேலிட்டு குரலுயர்த்த, உச்சிக்கு வரவர வெப்பம் கூடி, உஷ்ணத்தின் தகிப்பு உடல் தாக்க, மரத்தடி நிழலுக்காய் ஒதுங்கி, வவ்வவ்வெள. கூடுவிட்டு கூடு பாய்ந்து கோபத்தில் வவ்வவ்வெள. சர்வரோக நிவாரணியாய் கூவி விற்க வவ்வவ்வெள. இது உன் இடமில்லை வவ்வவ்வெள. ராஷ்ட்ரபதி பரிசின் கனவென வவ்வவ்வெள. உனக்கிங்கே இடமில்லை வவ்வவ்வெள. அவமான மிரட்டலாய் வவ்வவ்வெள. ஒரு வவ்வவ்வவெள, உள்ளே நுழைந்ததும் எத்துனை வவ்வவ்வெள. பெரும்பாலும் வவ்வவ்வெள தன் பயத்தில் இருந்தே பிறக்கிறது. எல்லா வவ்வவ்வெளக்கும் தெளிவான நோக்கம் இருக்கிறது. தன் இருப்பை ஸ்தாபிக்க வவ்வவ்வெள. விஸ்தரிக்க வவ்வவ்வெள. கூட்டத்தைக் கலைத்து, பிரித்து, எதிர்ப்பை விரட்டி, மிரட்டி, ஆதரவைத் திரட்ட வவ்வவ்வெள. உயர்ந்த நோக்க வவ்வவ்வெள. ஆழ்மனத்தின் வவ்வவ்வெள. கேளிக்கையைப் பார்த்து இலக்கியம் வவ்வவ்வெள. இலக்கியத்தைப் பார்த்து மக்கள் இலக்கியம் வவ்வவ்வெள. யாரையுமே பார்க்காமல் நாளைய தினத்தை எப்படி நகர்த்துவதென திகைப்புடன் முன்னகரும்…

September 12, 2010 maamallan 3Comment

பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன எதிர்ப்பாய் பொடியர்களின் கல் எறி காலடித் தடம் பதிப்பதற்கு காததூரம் முன்பாக கல் ரோஜாக்கள் விழுந்து சிதறின. கல் விழுந்தெழுந்த புழுதியில் கண் கரித்ததெனினும் கருமமே கண்ணாக முன்னேறிக்கொண்டு இருந்தது பீரங்கி ஊரும் எறும்பு ஒதுங்க இடமின்றி திகைத்தது நில் என் உயிருக்கு உத்திரவாதம் சொல் என்றது யுத்தபூமியில் இருந்ததே குற்றம் விழுந்த கல்லின் சில்லொன்று தெரிக்க இரும்புக் கவசம் க்னங்கென ஒலியெழுப்பிற்று நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு கண்சிவந்து கனன்ற பீரங்கி முன்னேறிற்று எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில் ****************************************** நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு

September 10, 2010 maamallan 94Comment

கேள்விக்குறி மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை கிழித்தீர்களா?     திரு வேட்டைக்காரரே மதார் பொதுவெளியில் எழுதினாரா? அவங்க குழுமத்துல எழுதிக்கிட்டதைப் பொதுவெளி என்கிறீரா? அந்தக் குழுமத்துல வினவு மெம்பரா? நான் கூட உள்ள போயி என்ன நடக்குதுன்னு நேரடியா தெரிஞ்சிக்கதான் போனேன் உங்க மொதல் பதிவுக்கு அப்புறம். கதவு தெறக்கவே இல்லை . //மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? //சாந்திக்கும் சண்டாளர்களுக்குமான சண்டையில் வினவும் சாந்தியும் தான் முதலில் மதார் பெயரை ’வினவு’ தளத்தில் இழுத்தது. ஒரு பொய்யை நாங்கள்ளாம் தனித்தனியா நூறு தடவதான் சொல்ல முடியும் வினவின் ஆள்பலத்தை வைத்து கோடி தடவை சொல்லி உண்மையாக்கி கோயபல்ஸ்ஸையே கூனிக்குறுக…

September 8, 2010 maamallan 14Comment

மதார் said… பக்கங்களை நிரப்பத்தான் ஒரு எழுத்தாளன் மித மிஞ்சிய கற்பனைகள் கலந்து எழுதுகிறார் என்றால் கல்கியின் பல நாவல்கள் பாகங்களில் வராமல் ஒரு சில பக்கங்களிலேயே முடிந்திருக்கும் . ஒரு தாய் குழந்தையை பெற்றெடுத்தாள் என்று ஒரு வரியில் முடிப்பதைவிட அதற்கு முன் அவளின் எதிர்பார்ப்புகள் , வலிகள் , சந்தோசங்கள் என்று வார்த்தைகளால் விவரிக்கும் போதே அத்தருணத்தை முழுமையாய் ஒரு வாசகனை உணரச் செய்ய முடியும் . நம்மையும் அறியாமல் வாசிக்கும் வார்த்தைகள் மூலமே அக்காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருவதுதானே ஒரு எழுத்தாளனின் கற்பனைகளும் எழுத்துகளும் ? இப்போதுதான் சுகுமாரன் தொலைபேசியில் சொன்னார் வாளால் சவரம் செய்யாதே என்று. என்ன செய்யறது கடைனு தெறந்துட்டா கஸ்டமர்ஸ் வந்துண்டேதான இருப்பா. மழிக்கறத மழிச்சும் செரைக்கரதை செரைச்சும்தானே ஆகனும். என்ன ஒரு பதைப்புன்னா சவரம் பண்ணிக்கும்போது அசங்காம இருக்கணும்னு அவாளுக்கு தெரியனும் எக்குதப்பா சிலும்பினா சிராய்ச்சுடும் மனசுல. இங்கே…

September 5, 2010 maamallan 7Comment

வலி என்கிற இந்தக்கதை பிரசுரத்திற்குக்கூட லாயக்கில்லை என கல்கியில் நிர்தாட்சண்யமாக மெஜாரிட்டி நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. அதிலொருவர் சிவசங்கரி, பின் ஒரே ஒருவரின் தீர்க்கமான வேண்டுகோளால் போனால் போகிறதென்று மூன்றாவது பரிசாக (மூன்றாவதும் தேர்ந்தெடுத்தாயிற்று அவரின் தலையீட்டினால் அதையே இரண்டாக்கி இரண்டாவது கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தக் கதை) அந்தக் கதை….. கல்லூரியின் ஆரம்ப நாட்களில், கவிதைப் போட்டிகளில், நீங்கள் நாங்கள் எரிப்போம் கொளுத்துவோம் என்று லெளட்ஸ்பீக்கர் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில், என்  குட்டிபல்லி  போன்ற  ஒல்லி உருவத்தோடு, இந்த ‘வெயிட்டான’ கவிதைகள், யாரோ எழுதிக்கொடுத்துதான் இந்த சிறுவன் படிக்கிறான் என்ற சம்சயத்தை நடுவர்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தமையால்தான், பாராட்டுகள் குவிந்தும் பரிசு கிடைக்காமல் தட்டிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிற சூக்ஷமத்தைக் கண்டுபிடித்ததும், செய்த தந்திரோபாயம், காதி வஸ்திராலயம் போய் ஒரு குடும்ப சீருடைக்குத் தேவையான எருமைத்தோலை வாங்கி, அணிந்துகொண்டால் எருமைக்கும் காற்றோட்டமாக இருக்கும்படியான அளவில் தைத்துக் கொண்டதும், ஜாதகக் கட்டங்களில் கிரகங்களுக் கெல்லாம் கிறுக்குப் பிடித்து விட்டது…

September 2, 2010 maamallan 6Comment

ஜனவரி 2008ல் ஒரு அன்பர் எழுதிய இடுகை மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த  மாமல்லன். மாதத்திற்கு  இரண்டு  நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம்  யாராவது  விமலாதித்த  மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா. பெரும்பாலும் சிறு பத்திரிகை சார்ந்தே இவரது வெளியீடுகள் இருந்தாலும் எல்லா விதப் பத்திரிகைகளிலும் வெளியாகக் கூடிய எழுத்து நடை இவருடையது. சிக்கலில்லாத  தெளிவான  மொழியில்  கதைகள் இருக்கும்……. இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பது ஒரு வகையில் தமிழ்ப்  புனைவுலகிற்கு  நஷ்டமே. சுந்தர  ராமசாமி  ஓர்  இடத்தில் சொன்னதைப் போல் முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், மூன்றாந்தர எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில்  இருக்கிறோம். (முதல்  தரம்  மூன்றாம்  தரம்  என்பதில்  சில மாறுபாடுகள் இருந்த போதும் அவரது…

August 31, 2010 maamallan 19Comment

1997 ல் கணினியைக் கண்டு பயந்ததைப் போல், தட்டச்சையும் பார்த்து முதலில்  பயந்துதான்  போனேன். ஏற்கெனவே  கொஞ்சம்  கொஞ்சம் வெவ்வேறு மென்பொருட்களில் அடித்திருக்கிறேன், என்றாலும் நீளமாக அடிக்க  முனைகையில்  எக்கச்சக்க  பிழைகள். அழகிதான்  சிறந்தது  என எண்ணி அதில் பழகிவிட்டேன். NHM அதைவிடவும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் ந் nh க்கு பதிலாக w க்குப் போய்விட்டது. ழ் க்கு z அடித்தாலே போதும். இந்த மாற்றதிற்குப் பழக,  கொஞ்சம்  அவகாசம்  எடுக்கக்கூடும். தமிழ்கூறு நல்லுலகு  அதுவரை  தாங்கித்தான்  ஆக  வேண்டும். தாங்கிக் கொள்ளல் தமிழனின் தனித்துவம். செப்டம்பர் 1994 ல்  எழுதிய  சோழிகள்  என்கிற  கதை  அகநாழிகையில் இரண்டொரு நாளில் மீள்-பிரசுரமாக வர உள்ளது. அரசாங்க  ஜெராக்ஸை  விடவும்  மோசமான  அச்சில், கையகல  சைசில் வெளிவந்தது  1995 ல். அதைவிடவும்  பெரிய  சைசில்  மையிலை  தேரடி எதிரில் அம்மாவும் பெண்ணுமாக வெங்காய பஜ்ஜி போடுகிறார்கள். கபாலி கோவிலுக்கு செருப்புவிடும் இடத்தையொட்டிய…

August 30, 2010 maamallan 16Comment

தமிழ்ப்பறவை said… மவுனமாக நகர்ந்து விடுகிறேன் இப்போது… August 29, 2010 11:53 PM இதற்குப் பொருள், முழுக்க தவறில்லை என்றில்லை. பரவாயில்லை பாசாகிவிட்டேன் என அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். கற்களுக்கிடையில் பல் என்பதற்கு பதிலாக பற்களுக்கிடையில் கல் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தானே. “க. நா. சுவுக்கு ப்ருஃப் பார்க்கவே தெரியாது. ப்ருஃப் பார்த்தால் ஒரிஜினலில் இருப்பதை விட பிழைகள் கூடுதலாகிவிடும். அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் செல்லப்பா அழகாகப் பிழை திருத்துவார். எழுத்து நடத்தியபின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு விஷயங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தார்.” http://sundararamaswamy.com/Ninaivodai_Chellappa1.htm (நன்றி) திரும்ப எழுதுவது என முடிவெடுத்ததும், முதலில் செய்தது என் குண்டு கருப்புப் பேனாவைத் தேடியதுதான். பல காலங்கள் அது என்னோடே இருந்தது. அலுவலகம்  விசித்திரப்  பிராணியாக  என்னைப்  பார்த்தது. பார்க்கவேண்டும் என்பதற்காகவே வைத்துக் கொண்டிருந்தாகக் கூட இருந்திருக்கலாம். இல்லை. கிடைக்க வழியில்லை என திடப்பட்டதும், புதிதாக ஒன்றை வாங்கிவிடலாம் என்று, வண்டியை எடுத்துக்…

August 30, 2010 maamallan 5Comment

தமிழ்ப்பறவை said… மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன். இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனியுங்களேன்.ஃப்ளோவைத் தடுத்துவிடுகிறது. August 27, 2010 3:56 PM விமலாதித்த மாமல்லன் said… பொன் வாசுதேவனுக்கப்புறம், உங்களைப் போன்ற உற்ற நண்பர் ஒருவர் கிடையாது சார். தயவுசெய்து கட்டுரையை அப்படியே நகல் எடுத்து பிழை திருத்தி (பிழையிருக்கும் இடங்களைக் அடிக்கோடிட்டு எனக்கு madrasdada@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழும். எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது. இங்கிலீஷுக்கும் பெரிய வாழ்வில்லை. கடந்த 15 வருடங்களில் தமிழ் எழுதாமல் படிக்காமல் போனதில் ர் ற் ன் ண் ந் என்னைத் துவம்சம் செய்கின்றன. தொடர்ந்த பயிற்சி இல்லையேல் மொழி  மறக்கும்.  தந்தை   வழிமொழியான  மராத்தி  சுத்தமாக மறந்து …..இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரையாக…. இந்த ஒருமுறை…

August 25, 2010 maamallan 1Comment

The Bear – Film by Jean-Jacques Annaud பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பில் ஃப்ரெஞ்ச் படித்திருந்திருக்கலாம் (அய்யய்யோ அசோகமித்திரன் வந்துட்டாருபா) பள்ளிக்கூடத்தையே உட்டுட்டு பாந்து சண்டை பாக்கறதும், இருந்த ரெண்டே காக்கி டவுசரு வெள்ளை சட்டையோட, தக்கினியூண்டு இருந்துகிணு வெள்ளெலி மாதிரி இருந்ததால ஆஸ்ரமத்தானாட்டம், நைஸ்ஸா உள்ள பூந்து வாராவாரம் ஒன்னும் புரியாட்டியும், ஊமக்கோட்டானாட்டம் படம் பாக்குறது. மாட்டினா டின்னு கட்டிறப் போறானுங்களேனு க்ளைமாக்ஸ்ல, வெளியப்போறக் கதவாண்ட நின்னுகினு தெரைக்கிப் பின்னாடி படம் பாக்குறது. பகிர்வென்பது  மூலத்தைக்  காட்டவேண்டும்.  அதன்  மூலம்  வாசகனோ பார்வையாளனோ அல்லது தல கிட்ட வந்தா எதுனா மேட்ரு கெடகும்பா என வருகிற, ஏன் வந்தோம் இவனிடம் என்கிற காரணம் கூட அறியாத பாமர விசிறியாகக்கூட (இவ்ரு எணெயத்துல ரொம்பொ பேமஸுபா) அவன் பயணத்தை அவன் மேற்கொள்ள வழிசெய்வதாக இருக்கவேண்டும். படத்தின் தொடக்கத்திலிருந்து குரல்கள் இடி இயற்கை ஒலிகள் மட்டுமே. பின்னனி இசை எந்த கனத்தில் தொடங்குகிறது. அங்கதான்…