August 28, 2010 maamallan 2Comment

எழுத்து  என்பது  வெறும்  திறமை  அன்று. அதற்குப்  பொருள்  திறமையை மறுப்பது  என்பதுமன்று. எழுதும்  திறமையைப்  பயிற்சியே கூர்மைப் படுத்தும். எழுத்தின்  ஆதாரத்  தேவை  உண்மை. பட்டறிந்த  உண்மை அனுபவம் பாதிவழி காப்பாற்றும். குறிப்பாக நடைவண்டி எழுத்துக்கு நேரடி அனுபவம் அத்தியாவசியம். செய்திறன் மெருகூட்டும். மீதியை வாசகன் பார்த்துக் கொள்வான். நீங்கள்,  ட்ரைவ்-இன்  போய்  வந்து  கொண்டிருந்து,  அது  இடிக்கப்பட்ட இழப்பினால் உண்டான உண்மையான சோகம் என்றால், எந்த வடிவத்தில் எழுதப்  பட்டாலும்  கொஞ்சமேனும்  அடுத்தவனை  பாதிக்கும். ட்ரைவ்-இன் ‘இடிக்கப்பட்டது’ எல்லோரும் அறிந்த ’செய்தி’. அதுவரை உள்ளே கூட நுழையாத  ஒருவனுக்கு  அதை  வைத்துக்  கதை ‘பண்ணினால்’ என்ன எனத்தோன்றிய காரியமாகவே படுகிறது. என் அனுமானம் தவறாகக்கூட இருக்கலாம். எனக்கு  இப்படியொரு  எண்ணமே  உதிக்காமல் எழுத வேண்டியது  உங்கள்  பொறுப்பு. உங்கள்  ‘சோகம்’ செவிவழி  வந்து ஜீரணமும் ஆகாமல் இருந்தால் அது ‘போலி’ அனுபவம். போலி கம்யூனிஸம், போலி ஜனநாயகம், போலி…

August 28, 2010 maamallan 2Comment

நான் குறிப்பிடும் இடமும் நீங்கள் எழுதியிருக்கும் இடமும் வேறுவேறாகத் தோன்றும் அளவிற்குத் தகவல் பிழைகள். கதையில் தகவல் பிழை,  எழுத்துப்  பிழையை  விட  மோசமானது.   பிழை திருத்துபவர் தகவலைத் திருத்தத் தொடங்கினால் அப்புறம் அது உங்கள் பெயரில்  பிரசுரமாகிற  அவரது  கதை  என்றுதான்  மிஞ்சும். என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என சொந்த பெண்டாட்டி குழந்தையை அந்நியனிடத்தில் விட  முடியுமா? கதை  எடிட்டர்  எல்லாம்  எழுத்து  வணிகத் தொழிற் கூடங்களுக்கு,  இலக்கியத்திற்கல்ல.  அச்சேறும்  முன்  அடுத்தவர் அபிப்ராயம் கேட்டு பரிசீலிக்கலாமெனத் தோன்றினால் திரும்ப நீங்கள்தான்  எழுத  வேண்டும். நல்ல  புடவை  கிடைக்கிற  இடத்தின் தகவலைத்தான்  அடுத்தவன்  சொல்ல, தெரிந்து  கொள்ளலாம்,  அவனே வந்து அணிவித்தும் விட அனுமதிக்க முடியுமா? இரண்டு  முதியவர்கள்  பற்றிய கதை. ஆனால் அவர்கள் தகவலாக மட்டுமே எஞ்சிப் போயிருக்கிறார்கள். பாத்திரங்களாய் உயிர்ப் பெறவில்லை. எழுத்தாளனுக்கு  நம்பகத்தன்மை  முக்கியம். கோணம்  முக்கியம்.  ஆக முதலாவதாக  கருப்பொருள் மற்றும்  களத்தேர்வு  மிகமிக …

August 28, 2010 maamallan

எப்படி சார் இப்படி எழுதறீங்க? கண்ணையு காதையு தெறந்து வெச்சுண்டிருக்கேன் அவ்வளவுதான் – தி.ஜானகிராமன். எவர் வேண்டுமாயினும் பாடிவிட முடிகிறதா அட குளியலறையில் கூட. பாடும்   குரலையும்   ஞானத்தையும்   கொடுக்காமல்   வஞ்சித்த போதிலும், காதுகளைக் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி. ஜெயகாந்தனின்  ‘நினைத்துப்  பார்க்கிறேன்’  படித்துப் பாருங்கள். அதில்  அவர் வீணை  கற்றுக்கொண்டதை, கற்றுக்கொள்ள  ஆசைப்பட்டதை, முயற்சித்தை எழுதியிருப்பார். அந்த வாசிப்பு நேரடி அனுபவமாக உங்களுக்கு அமைவதே நல்லது, தேடிப்படியுங்கள். அதிலிருந்து  ஒரு  வரி  மட்டும்  – எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது எதன் மீதும் மரியாதை  இல்லாமல் சொல்லப்படும் வார்த்தை. இதை  அவர்  எழுதிய  போது  அவரே  கொடுமுடி. தமிழ்நாட்டில் இலக்கியமென்றால் அவர்தான். நடிப்புலகிற்கு வெளியிலிருந்த நட்சத்திரம். எம்ஜிஆர் சிவாஜி ஜெயகாந்தன். பிரபலங்களின், அன்றைய தர வரிசை பட்டியல். அரசியலில்  அண்ணாவை  அண்ணாதுரை  என்று  சொன்னாலே, அவமதிப்பு என்றிருந்த  காலத்தில்  அரசியல்  மேடையில் – மூடரே  அவரை  அறிஞர்…

August 28, 2010 maamallan 4Comment

வாசகனாக உருவாகும் முன்னாலேயே எழுத்தாளனாகிவிடும் விபரீதம் ஏற்பட இது போன்ற தவறான முன்னுதாரனங்களே காரணம். ஆரோக்கியமான வாசக சூழலுக்கு பதில் தன்முனைப்போடு ஒருமுகப்படுத்தப்படும் ஜால்ரா சூழல். //அமெரிக்காவிலிருந்து நமக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை பணம் வருகிறது. அத்துடன் நமது ஓய்வூதிய பணம், நில புலன்களை விற்று வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணம் என இருவருமே நல்ல நிலையில் இருப்பதாக  நினைத்துக்  கொள்வோம். இத்தனை  இருந்தும்  நமது தனிமையை, கவனிப்பாரின்றி வீட்டைக் காவல் காத்துவரும் நிலைமையை நினைத்து டிரைவ்-இன்னில் வெகுநேரம் பேசியிருக்கிறோம்.// கருத்து  கதையாக  வேண்டும். அந்தப்  பெரியவர்  தமது  தனிப்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் நண்பருக்குத் தெரிவித்தபடி புலம்பி தள்ளத்தள்ள வாசகன் தன்னை அவராக பாவிக்க முனைந்தால் – நிறம் மதம் இனம் மொழி நாடுகள் வயது பாலினம் கடந்து அவரது வலி வாசகனைப் பீடிக்குமேயானால் – உலகத்தின் சிறந்த எழுத்துக்கள் இப்படி பாதிப்பதை  நாமே  அனுபவித்துக்  கொண்டுதானே  இருக்கிறோம்.  வாசிப்பு ரசனை …

August 25, 2010 maamallan 1Comment

The Bear – Film by Jean-Jacques Annaud பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பில் ஃப்ரெஞ்ச் படித்திருந்திருக்கலாம் (அய்யய்யோ அசோகமித்திரன் வந்துட்டாருபா) பள்ளிக்கூடத்தையே உட்டுட்டு பாந்து சண்டை பாக்கறதும், இருந்த ரெண்டே காக்கி டவுசரு வெள்ளை சட்டையோட, தக்கினியூண்டு இருந்துகிணு வெள்ளெலி மாதிரி இருந்ததால ஆஸ்ரமத்தானாட்டம், நைஸ்ஸா உள்ள பூந்து வாராவாரம் ஒன்னும் புரியாட்டியும், ஊமக்கோட்டானாட்டம் படம் பாக்குறது. மாட்டினா டின்னு கட்டிறப் போறானுங்களேனு க்ளைமாக்ஸ்ல, வெளியப்போறக் கதவாண்ட நின்னுகினு தெரைக்கிப் பின்னாடி படம் பாக்குறது. பகிர்வென்பது  மூலத்தைக்  காட்டவேண்டும்.  அதன்  மூலம்  வாசகனோ பார்வையாளனோ அல்லது தல கிட்ட வந்தா எதுனா மேட்ரு கெடகும்பா என வருகிற, ஏன் வந்தோம் இவனிடம் என்கிற காரணம் கூட அறியாத பாமர விசிறியாகக்கூட (இவ்ரு எணெயத்துல ரொம்பொ பேமஸுபா) அவன் பயணத்தை அவன் மேற்கொள்ள வழிசெய்வதாக இருக்கவேண்டும். படத்தின் தொடக்கத்திலிருந்து குரல்கள் இடி இயற்கை ஒலிகள் மட்டுமே. பின்னனி இசை எந்த கனத்தில் தொடங்குகிறது. அங்கதான்…

August 25, 2010 maamallan 5Comment

The Bear – Film by Jean-Jacques Annaud படம் பார்த்துவிட்டீர்களா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நமது  அக்கப்போர்  இருக்கவே  இருக்கிறது. அமைதி. கொஞ்சம்  நீர் குடிக்கலாம்.   அவசரம்  ஒன்றுமில்லை  கீழே  இருப்பதை அப்புறம் படிக்கலாம். எனது  நெடுநளைய  நண்பர்  சம்பத்.  இவர்  பற்றிய விபரங்களைத் தெரிவிக்கலாமா இல்லையா என்று இவரிடம் அனுமதிபெற்ற பிறகே சொல்லமுடியும்.   இவர்  பெயர்  சம்பத்  என்பதைத் தாண்டி  எனக்கே அவ்வளவாகத்  தெரியாது.  ஆனால்  நான்  இவருக்கு  நிறைய  கடன் பட்டிருக்கிறேன்.   கணினிமேல்  எனக்கிருந்த  மோகத்தை  விசிறிவிட்டவர். வழி சொன்னால்  போதாதா  வைகுந்த  வாசலைத்  தட்டித் திறந்துவிட மாட்டோமா  என்ன. எழுதச்சொல்லி விடாமல் பிறாண்டிக்கொண்டே இருந்த இருவரில் இவர் ஒருவர்.  என்னைவிட  பத்தாண்டுகளாவது   இளையவர்  என  நினைக்கிறேன். இன்னொருவர்  சுந்தர  ராமசாமி,  பல  ஆண்டுகள்  மூத்தவர்.  பார்த்த படங்களைப்பற்றி  எழுதக்கூட  வேண்டாம்,  பட்டியலாகவாவது  எழுதி வெச்சுக்கோங்கொ.  என்ன  படம்  முக்யாமான  படம்னு,  பார்த்த  அனுபவத்த வெச்சுண்டு  படம்  பேர் …

August 23, 2010 maamallan 42Comment

ஒரே  அடிதடி, ரகளை,     அலுவலகத்தில்.  ஒரே  வருடத்தில்  ஆறு இட மாற்றங்கள். தொடக்கப் புள்ளி  தொழில்முறை  அசூயை. குழுவிற்குப் புதியவனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள சட்டாம்பிள்ளையின் தந்திர விளையாட்டு. கொஞ்சம் பொறுத்துப் பார்த்தேன். அதுவே என் ரத்தத்திற்கு அபூர்வம். உடல்  ஊதினால்  ரத்தம்  சூடாறிவிடுமா  என்ன? பல வருட சுய தம்பட்டத்தால் ஓங்கி நிற்பதான தோற்றம் காட்டிய உளுத்த கட்டிடம், ஒரே  ஒரு  பயன்  கவிதையின்  (இலக்கிய  கவிதை  அல்ல)  உதையில்  நொறுங்கி கற்குவியலானது. சரி – தவறு,  என்கிற  மதிப்பீடு, எப்போதும்  சுயசார்புடையதுதானே. அப்போதைக்கு யார் ஆதாயம்? உப்புப்  பெறாத  ஒரு  கீழ்சாதிப்பயல் (நேரடி தேர்வில் வந்தவன் உயர்சாதி) கடைநிலை  குமாஸ்தாவில்  தொடங்கி,  சீருடை அணிபவன் (அப்பன்  இறந்ததால்  அனுதாபப்  பங்கில்  வேலையில்  சேர்ந்தவன். பட்டப்படிப்புகூட  முடிக்காத  பரதேசி). இவனெல்லாம்  என்ன  செய்துவிடமுடியும்  என்கிற  இளக்காரம். ஒன்பது ஜோடிக்கால்கள் உதைத்து வெளியேற்றின.   இந்த நாட்டின் சட்டங்கள் இன்னமும்கூட நடைமுறைப் பயன்பாட்டில்…

August 21, 2010 maamallan

Elia Kazan – USA1930 களில் எலியா கஸான் வறுமையுடன் துருக்கியிலிருந்து அமெரிக்காவிற்குக்  குடிபெயர்ந்தார். அமெரிக்கா  பொருளாதாரத் தேக்கத்தால்  கடும்  அவதியில்  இருந்த காலம்.  கம்யூனிஸ்ட்  கட்சியில் உறுப்பினரானார். சிறிது  காலத்திற்குப்பின்  நம்பிக்கையிழந்து கட்சியிலிருந்து விலகினார். ‘க்ரூப்  த்தியேட்டர்’ என்கிற அமைப்பில் இயங்கினார். அந்த  அமைப்பில்  இடதுசாரி  சாய்நிலைவாளர்களும் அறிவுஜீவிகளும் அங்கம் வகித்தனர். சிறந்த  பல  நாடகங்களை கஸான் இயக்கினார். திரைபடங்களை இயக்கத் தொடங்கினார்.  டென்னினிஸி வில்லியம்ஸின் A Streetcar Named Desire (1947) நாடகம் (1951) சினிமா  மிகப்பெரும் பெயர் வாங்கித் தந்தது. மார்லென் ப்ராண்டோதான்  இரண்டிலுமே   நாயகன். எலியா  கஸான்தான் இரண்டையுமே  இயக்குநர்.24 வயதில் மார்லென் பிரண்டோ Streetcar Named Desire நாடகத்தின் பின் அரங்கில் (1947) 1947 ல் ஹாலிவுட்டுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரி அனுதாபிகளை  ‘கண்டுபிடிக்க’  Joseph McCarthy’s House Un-American Activities Committee  (HUAC)  நியமிப்பட்டது. ‘துப்பறிந்து’ பத்து  பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள்.  தண்டனை  அனுபவித்து  வெளிவந்தவர்களை …

August 20, 2010 maamallan 2Comment

Luchino Visconti di Modrone – Le notti bianche (White Nights), 1957, based on Fyodor Dostoevsky’s short story தாஸ்த்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற  இரவுகள்  கதையை  வலைத்தள மகாஜனங்களில்  பெரும்பாலானோர்  படித்திருக்க  வாய்ப்புகள்  அதிகம். முக்கியமான  காரணங்கள்,  மலிவுவிலை  சோவியத்  வெளியீடு.  சின்ன தலையணை. அநேகமாக  பொது  நூலகங்களில்  மற்றும்  நடைபாதை  பழைய புத்தகக்கடைகளில்  இன்றும் சுழற்சியிலிருப்பது.படித்திராதவர்களின் வசதிக்காக  கொஞ்சம் போல  கதை.  தன்மை  ஒருமையில் சொல்லப்படும் கதை.  பீட்டர்ஸ்பர்க்கில்  இரவு  நடையில்  ஒரு சிறிய பாலத்தினருகில்  தனியே  அழுதுகொண்டிருக்கும் அழகியொருத்தியைக் காண நேர்கிறது. ஆறுதலாகப் பேசத்தொடங்க அவள் தன் காதலனைப் பிரிந்த  துக்கக்தில்  இருப்பதை  அறிய  நேர்ந்து நடந்தவாறே பேசியபடி  அவளை  வீட்டில்விடுகிறான்.  அடுத்த  மூன்று நாட்களிலும் சிநேகிதத்தில்  கிளர்ச்சியுற்றவனாய்  காதலிக்கவே  தொடங்கி விடுகிறான். அவளிடம்  சொல்ல  யத்தனிக்கிற  அன்று  அவள்  காதலன் வரவும் இவனைத்  தோழனாக  மட்டுமே  பாவித்து  காதலனுடன்  சென்று விடுகிறாள். இவன்  பழையபடி  தனிமை …