August 18, 2010 maamallan 2Comment

Cyrano de Bergerac – Jean-Paul Rappeneau – ஃப்ரான்ஸ் 1992 மெட்ராஸ் திரைப்பட விழா – நூற்றாண்டுவிழா மண்டபம் – மெட்ராஸ் பல்கலைக் கழகம் இந்த விழாவிற் காகவே பிரத்தியேகமாய் திரைப்பட அரங்காக மாற்றப்பட்டது. உலகத் திரைப்படங்கள் இங்கும் இந்தியத் திரைப் படங்கள் வாலஜா ரோடிலிருந்த கலைவாணர் அரங்கத்திலும் அயல்நாட்டு சிறப்புப் பார்வையாகக் கொரியப் படங்கள் தேவி திரையரங்கிலும் திரை யிடப்பட்டன. தேவியில் ஸினிமாக்காராள் கூட்டம் முண்டியது. கை சைஸ் கொரியர்களுக்கே அந்த களேபரம். பின்னே   எத்தனைக்  காலம்தான் அவ்விடெ டைனொசாரையே ஜோதியில் பார்த்து மோக்ஷம் அடைவதாம்!நீள  மூக்குடன்  தன்னைக்  குரூபியாக   நினக்கும்   ஒரு  மாபெரும் போர் வீரனும் கவிஞனு னவனின் ஒருதலைக் காதல் காவியம்தான் இந்தப்படம். அழகின்மை காரணமாக தான் நிராகரிக்கப் பட்டு விடுவோமோ என்ற தயக்கத்திலேயே சொல்லாமல் மறைத்த காதல். இதற்குமேல்  ‘கதை’ சொன்னால்  எனக்கு  நானே தண்டனை கொடுத்துக் கொள்ள நேரும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். (அண்ணன் …

August 18, 2010 maamallan 10Comment

தோன்றியது.  சொல்ல  வேண்டும்  போலத்  தொன்றியது. அதான் சொல்கிறேன். இந்த சொற்களை ஒரு முறையேனும் சொல்லாத மனிதன் இருந்திருக்கக் கூடும். ஆனால்  அருளப்பட்டு  வாங்கிக்கொள்ளாத  மனிதன்  இருந்து இருப்பதற்கான  வாய்ப்பு  அரிதுதான். பட்டும்படாத அறிவுரை. கிடந்து பிறாண்டவில்லை என்கிற கண்ணியமான அவதானிப்பு. தவறாகப் போக நேர்கையில் “நா அப்பவே சொன்னேன் வேணாண்டானு, கேட்டாதானே!” சொல்லிக்கொள்ள முன்னெச்சரிக்கையாக தூவப்படும் கள்ள கண்னிய விதை. இது  நம்புகிறார்போல்  இல்லையே.  கொஞ்சம்  அதீதமாக  அல்லவா தோன்றுகிறது.  இவ்வளவு  முன்னீடுகளோடா  மனிதர்கள்  வாழ்கிறார்கள்? அடப்போய்யா  அவனவன்  யோசிக்கிறதே  இல்லை. ஏதோ என்னவோ வென்று நாளைக் கடத்திக்கொண்டிருக்கிறான் இதில் போய் காரண காரியங்களைத் தேடிக்கொண்டு! உண்மையில் ஏதோ என்னவோவாக வாழத்தான் அல்லது குறந்தபட்சம் அப்படித் தோற்றம் அளிக்கும்படியாகவாவது வாழத்தான் பிரியப் படுகிறோம். நான் எதையுமே திட்டமிடுவ தில்லை என்ன வருகிறதோ என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டுதான் இருந்துகொண்டு இருக்கிறேன். எத்தனை பேட்டிகளில் இதைக் கேட்டு இருப்போம். இது…

August 17, 2010 maamallan 3Comment

Edgar Reitz – ஜெர்மனிஅப்போதைய மெட்ராஸில் (எனக்கு எப்போதுமே இது மெட்ராஸ்தான்) ஃபில்ம் சேம்பரில், ஹெய்மத் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியும் நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஜெர்மன் கல்ச்சுரல் சென்ட்டரும் இணந்து திரையிட்டன. இந்த ஒரு படத்தைத் திரையிட்டதற்காக மட்டுமே CFSக்கு (சிவக்குமார், ஹரிஹரன், கல்யாணராமன் என எத்தனை பேரின் உழைப்பும் ஆர்வமும்) என் சாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள். சுகுமாரனும் நா.விச்வநாதனும் (பாதசாரி) கோவையிலிருந்து இதற்காகவே வந்து தங்கியிருந்து பார்த்தனர். ஏதோ பட்டறை போல காலை 9 1/2 மணிக்குத் தொடங்கி 11 1/2 க்கு டீ 1 லிருந்து 2 சாப்பாடு 3 1/2 க்கு டீ 5 1/2 க்கு இண்டர்வெல். ஆமாம் மீதி படம் அடுத்த நாள். படத்தின் நீளம் 16 மணி நேரம். அப்படி என்னதான் நூதனமான விஷயத்தை அதில் சொல்லிட்டான். ஒரு கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் இருக்கிறவர்கள் பிரிதல், கூடுதல், வம்ஸம் விருத்தியாகிறது. குக்கிராமம் ஊராகி…

August 16, 2010 maamallan 4Comment

Federico Fellini – இத்தாலி (1987)இன்று Inception பார்த்தேன் மிரட்டி இருக்கிறார் Christopher Nolan. தொழில்நுட்ப பிருமாண்டம் பிரமிப்பை உண்டாக்குகிறது. கனவுக்குள் கனவுக்குள் கனவு. 1994ல் கல்கத்தா திரைப்படவிழாவின் நிறைவுப்படமாகவும் Felliniக்கு அஞ்சலியாகவும் இண்டர்வ்யூ படத்தைத் திரையிட்டார்கள். பொதுவாகவே விழாவின் நிறைவுப் படம்,விரைவு ரயில் பிடிப்பதிலேயே குறியாக இருப்பதனால்  சாய்ஸில்  விடப்பட்டுவிடும்.  அன்று  ரயிலைப் பிடித்த பலபேர் படத்தைத் தவற விட்டதற்காக ரொம்பவே வருத்தப்பட்டார்கள். Felliniயை இண்டர்வ்யூ எடுக்க ஒரு ஜப்பானிய திரைப்படக்குழு காமிராவும் கையுமாக வருகிறது. ஃபெலினி படம் எடுத்துக்கொடிண்ருப்பதை அவர்கள் படம் எடுக்கிறார்கள். ஃபெலினி எடுத்துக்கொண்டிருப்பதோ ஒரு டைரக்டர் படம்  எடுத்துக் கொண்டிருப்பதைப்  பற்றி.  அந்தப்படமோ  இளம் பத்திரிக்கையாளனாக சினிசிட்டா என்கிற ஸ்டூடியோவுக்குள் நடிகையை இண்ட்டர்வ்யூ எடுக்கவரும் ஃபெலினியைப்பற்றி. கொஞ்சம் இருங்கள் எங்கோ தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறன். அதாவது…….தெருவோர  படபிடிப்பிலேயே  எல்லோரும்  பார்த்திருக்கக் கூடும் காமிராவிற்கு  முன்னும்  பின்னும்  இருக்கக்கூடிய  கூட்டத்தை,  இதை ஒருவர்  இயக்கிக்கொண்டு இருப்பார்.  இந்தப்படத்தில்  ஜப்பானியத்…